கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுட போறேன்.. மிரட்டிய வெற்றிவேலன்.. தெறித்து ஓடிய மக்கள்.. சரமாரி கத்திக் குத்து.. கோவையில் ஷாக்!

பேங்க் மேனேஜர் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை கனரா வங்கியில் பரபரப்பு.. பேங்க் மேனேஜர் மீது தாக்குதல்

    கோவை: புரோக்கரின் தலையில் துப்பாக்கியை வைத்து, "சுட போறேன்" என்று வெற்றிவேலன் சொன்னதுமே, பேங்கில் இருந்த ஊழியர்கள், பொதுமக்கள் தலைதெறித்து ஓடினர்.. கனரா பேங்க் மேனேஜர் உட்பட பலரையும் பட்டப்பகலில் வெற்றிவேலன் கத்தியதால் குத்திய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அருகே சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேலன். 44 வயதான இவர், ஒண்டிப்புதூரில் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடையை விரிவுபடுத்த வெற்றிவேலன் விரும்பினார். அதற்காக கோவை - திருச்சி ரோட்டில் உள்ள கனரா வங்கியில் ரூ. 1 கோடி கடன் கேட்டு அதற்கான ஆவணங்களையும் தந்தார்.

    இந்த சமயத்தில்தான், புரோக்கர் குணபாலன் என்பவர் வெற்றிவேலனுக்கு பழக்கமானார். வங்கியில் தனக்கு நிறைய பேரை தெரியும் என்பதால், ஈஸியாக 1 கோடி ரூபாய் வாங்கி தருவதாகவும் கமிஷனாக ரூ. 6 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டார். இதற்கு வெற்றி வேலனும் சம்மதித்து, ரூ. 3 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார்.

    ஆவணங்கள்

    ஆவணங்கள்

    ஆனால் கொஞ்ச நாளில், வெற்றி வேலன் பேங்கில் தந்திருந்த எல்லா ஆவணங்களம் திரும்பி வந்துவிட்டது, அத்துடடன் 1 கோடி ரூபாய் கடன் தர முடியாது என்றும் பேங்கில் சொல்லிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிவேலன் நேரில் சென்று கேட்டதற்கு, "நீங்கள் ஏற்கனவே ஒரு பிரைவேட் பேங்கில் கடன் வாங்கி இருக்கிறீர்கள், அந்த பணத்தையும் திருப்பி தரவிலை.. அதனால் கடன் இல்லை" என்றார்கள்.

     அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இதனால் ஏமாற்றமும், அதிர்ச்சியிலும் வெற்றிவேலன் இருந்தார். இந்த ஆத்திரம் அப்படியே குணபாலன் மீது திரும்பியது. "நான் இருக்கேன்.. எப்படியாவது பணத்தை வாங்கி தந்திடறேன்" என்று சொல்லி 3 லட்சத்தையும் பெற்றுகொண்ட குணபாலனை தேடினார். அப்போதுதான், புரோக்கர் குணபாலன் கனரா பேங்குக்கு வந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், ஆவேகம் ஆகிவிட்டார் வெற்றிவேலன்.

     புரோக்கர்

    புரோக்கர்

    தன்னிடம் இருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து கொண்டு பேங்கிற்குள் நுழைந்தார். கையில் துப்பாக்கியுடன் வெற்றிவேலன் பேங்கிற்குள் நுழைந்ததுமே அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினர். புரோக்கர் குணபாலன் பேங்க் மேனேஜரிடம் பேசிக் கொண்டிருதார். திடீரென புரோக்கரின் தலையில் துப்பாக்கியை வைத்தார்.. உடனே அங்கிருந்தவர்கள் சூழ்ந்துகொண்டு இதனை தடுக்கவும் துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது.

    கோபம்

    கோபம்

    இதனால் இன்னும் கோபம் அடைந்த வெற்றி வேலன் பேங்க் மேனேஜர் சந்திரசேகர், அங்கிருந்த சில ஊழியர்களை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கும் தகவல் சொல்லப்பட அவர்கள் விரைந்து வந்து வெற்றிவேலனை மடக்கி பிடித்து, துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இப்போது, 3 பிரிவுகளில் வெற்றிவேலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    English summary
    stabbing canara Bank manager and staffs in coimbatore and one arrested under 3 sections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X