கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டீ குடிச்சு.. செல்பி எடுத்து.. மனுக்களை வாங்கி.. சூலூரில் கலக்கிய ஸ்டாலின்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சூலூர் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம்-வீடியோ

    கோவை: சூலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் அப்பகுதி மக்களோடு தேனீர் பருகியதுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

    தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிகிறது. இந்நிலையில்கோவை சூலூர் தொகுதிக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டி மற்றும் செலக்கரிசல் பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

    நடைபெற இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

    23ம் தேதி சோனியா போடும் அதிரடி ஸ்கெட்ச்... ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கிய கடிதம் 23ம் தேதி சோனியா போடும் அதிரடி ஸ்கெட்ச்... ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு முக்கிய கடிதம்

    குறைகளை கேட்ட ஸ்டாலின்

    குறைகளை கேட்ட ஸ்டாலின்

    அதன்படி, சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து இன்று காலை 8 மணியளவில் கோவை அப்பநாயக்கன்பட்டியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அப்போது, படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பல இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படாமல் தினந்தோறும் அவதியுற்றுவருவதாகவும், கடன் தொல்லை, கழிவறைகள் இல்லாத நிலை, கேபிள் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    ஸ்டாலின் அறிவிப்பு

    ஸ்டாலின் அறிவிப்பு

    அப்போது பேசிய ஸ்டாலின், "திமுக ஆட்சி அமைந்தவுடன் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றும், கலைஞர் ஆட்சியில் இருந்தபடி கேபிள் கட்டணம் ரூ.100க்கு கொண்டுவரப்படும் என்றும் முன்பே அறிவித்துவிட்டோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இந்த அரசு இழுத்தடித்து வருவதால் அடிப்படை பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளது.

    மக்களுடன் செல்பி

    மக்களுடன் செல்பி

    அத்தனை பிரச்சனைகளும் திமுக ஆட்சி அமைந்தவுடன் சரி செய்யப்படும் என்றார்.

    இதனைத்தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அப்பகுதி மக்கள் தேநீர் கொடுத்து தங்களது அன்பினை வெளிப்படுத்தினர். தேநீர் அருந்திய ஸ்டாலின், அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    மருந்துகள் கிடைப்பதில்லை

    மருந்துகள் கிடைப்பதில்லை

    பின்னர், அப்பநாயக்கன்பட்டி பேருந்துநிலையம் அருகே ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் இந்த அதிமுக ஆட்சியில் கிடைப்பதில்லை என்று குற்றம்சாட்டினர்.

    திண்ணை பிரச்சாரம்

    திண்ணை பிரச்சாரம்

    திமுக ஆட்சியில் இருந்தவாறு முறையாக மருந்துகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். பிரச்சனைகளை களைய பொங்கலூர் பழனிசாமி உறுதுணையாக இருப்பார் என்று கூறிய ஸ்டாலின், இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    ஸ்டாலின் உறுதி

    ஸ்டாலின் உறுதி

    அப்பகுதி பெண்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி ஸ்டாலினிடம் கொடுத்தனர். மனுக்களை படித்த ஸ்டாலின், இந்த மனுக்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திமுக ஆட்சியமைந்தவுடன் மனுக்களில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதி அளித்து பிரச்சாரத்தை முடித்தார்.

    இன்று மாலை 6.30 மணியளவில் ஸ்டாலின் முத்துக்கவுண்டன் புதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார், பின்னர் கரவழி மாதப்பூர் மற்றும் இருகூர் பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

    English summary
    Stalin busy in the last session of campaign in Sulur. Stalin was drinking tea and taken selfi with public.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X