கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூடு பிடிக்கும் பாலியல் விவகாரம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை.. மகளிர் ஆணையம் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது- வீடியோ

    கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடம் விசாரணை நடத்தப்படும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளுக்கு நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்கார வீடியோ காட்சிகள் வெளியானது. இது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது.

    இந்த விவகாரத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் பொள்ளாச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வீடியோவாடா எடுக்கறீங்க வீடியோ.. போடு.. பொள்ளாச்சி காம கும்பலை சரமாரியாக தாக்கிய மக்கள்- வைரல் வீடியோ

    விசாரணை

    விசாரணை

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டுள்ள நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார்.

    காவல் துறை விசாரணை

    காவல் துறை விசாரணை

    அப்போது அவர் கூறுகையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி அறிக்கை அளித்ததன் அடிப்படையில் நேற்று விசாரணை மேற்கொண்டோம். இதில் காவல் துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    எஸ்பியிடம் விசாரணை

    எஸ்பியிடம் விசாரணை

    பெண்கள் அவர்களது குறைகளைச் சொன்னால் நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் விசாரணை நடத்துவோம். பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளிப்படுத்தக் கூடாது.

    பெண்கள் புகார் தரலாம்

    பெண்கள் புகார் தரலாம்

    பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம். இவ்வளவு ஏன் தேவைப்பட்டால் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகனிடமும் விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக 044-28592750 என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றார்.

    பின்னணி என்ன?

    பின்னணி என்ன?

    வழக்கு பின்னணி: பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட நெட்வொர்க் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    விளக்கம்

    விளக்கம்

    இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பாலியல் சம்பவத்தில் தனது மகனுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுகவினர் கட்டவிழ்த்து விடும் பொய் என்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    State Women Welfare Chief Kanngi Bakkiyanathan says that if needed we will inquire Deputy Speaker Pollachi Jayaraman's son also.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X