கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் தொன்மையான மொழி... தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை - மோடி புகழாரம்

உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ் வழியில் மருத்துவம் படிக்கலாம் என்று கூறிய மோடி, மருத்துவம், பொறியியல் படிப்புகளை உள்ளூர் மொழியில் படிப்பதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

Recommended Video

    கோவை: 65% மின்சாரம் தமிழ்நாட்டிற்கு... பிரதமர் மோடி உறுதி!

    கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்துக்கு புகழாரம் சூட்டினார்.

    Tamil is an ancient language Tamil cultural festivals are famous - Modis praise

    தமிழகத்தில் 12 லட்சம் இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகிறது என்றார். தமிழகத்தில் 14 லட்சம் குடிநீர் இணைப்புகள் கிராமங்களில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று கூறிய மோடி, குறு சிறு தொழில்கள்துறைதான் தற்சார்பு பொருளாதாரத்துக்கு மதிப்பு சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

    கோவை பகுதியில் மத்திய அரசின் கடனுதவி திட்டங்கள் பெருமளவில் சென்றடைந்துள்ளன. சிறிய விவசாயிகளுக்காக மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்றார்.

    வெற்றி வேல் வீர வேல் என்று முழங்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடிவெற்றி வேல் வீர வேல் என்று முழங்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி

    விவசாயிகளின் கடன் அட்டை, மண் பரிசோதனை அட்டை ஆகியவற்றை செயல்படுத்துகிறோம். பிரதமரின் கிஷான் திட்டத்தால் பல கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை செயல்படுத்தியது மத்திய அரசு என்று தெரிவித்தார்.

    சிறுகுறு தொழில்கள் மேம்பாட்டுக்கு சாம்பியன் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    தமிழகத்தின் பெருமையை தெரிவித்த மோடி, தமிழ் மொழி தொன்மையானது. தமிழகத்தில் நடைபெறும் கலாச்சார விழாக்கள் புகழ் பெற்றவை என்று குறிப்பிட்டார். தமிழ் வழியில் மருத்துவம் படிக்கலாம் என்று கூறிய மோடி, மருத்துவம், பொறியியல் படிப்புகளை உள்ளூர் மொழியில் படிப்பதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

    English summary
    Tamil is the most ancient language in the world. Prime Minister Modi has praised Tamil cultural festivals. Modi said that medicine can be studied in Tamil way and that the youth will benefit by studying medicine and engineering courses in the local language.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X