கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை.. இந்து முன்னணி கண்டனம்

Google Oneindia Tamil News

கோவை: விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்து இருப்பதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவை காட்டூர் பகுதியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

Tamilnadu government ban imposed on the celebration of Ganesh Chaturthi: hindu munnani condemn

"தூத்துக்குடியில் நடைபெற்ற பணிமயமாதா ஆலய விழா நிகழ்சிக்கு அரசு தடை விதிக்கவில்லை. இஸ்லாமியர்களின் புனித திருநாளான பக்ரித்துக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை ஆனால் இந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த வாரம் சென்னையில் இந்து முன்னணியினர் இணைந்து விநாயகர் சதூர்த்தி தொடர்பாக எந்த வித கூட்டமும் கூட்டாமல் விழாவை கொண்டாட முடிவு செய்தோம். கொரோனா தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வைக்கப்படும் சிலைகள் எந்த விதி மீறலும் இல்லாமல் சிறப்பாக சிலைகள் கரைக்க முடிவு எடுத்திருக்கின்றோம்.

விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு விநாயகர் சதுர்த்தி.. தெருக்களில் சிலை வைக்கக் கூடாது.. வீட்டிலேயே கொண்டாடுங்க.. தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு காரணமாக பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்க்கை, நடுவீதிகளுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதூர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை விதித்து இருப்பதால் மண்பாண்டம், விநாயகர் சிலை செய்யும் ஏராளமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை விரட்ட விநாயகர் சதூர்த்தியை கொண்டாட வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குக்காக அரசு தடை விதிக்கும் முடிவை எடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விநாயகர் சிலை வைக்க இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளோம். தமிழக அரசு பலரின் வாழ்வாதாரத்தை நினைவில் கூர்ந்து பல்வேறு கட்டு பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி, விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் " இவ்வாறு கூறினார்.

English summary
hindu munnani has condemned the ban imposed by the Tamil Nadu government on the celebration of Ganesh Chaturthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X