கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்ட் - டைம்மில் பிஇ பிடெக் படிக்க ஆசையா? இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்

Google Oneindia Tamil News

கோவை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் டிப்ளமோ படிதத் மாணவர்கள் இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொழில் நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,. தமிழகத்தில் இயங்கி வரும் 9 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.. இந்த வகை படிப்புகளில் சேர டிப்ளமோ படித்தவர்கள் மட்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் www.ptbe-tnea.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Tamilnadu part time be admission 2020-21 Starts from today

விண்ணப்பிக்க பதிவுக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணைய தளத்தின் மூலம் செலுத்தலாம். இணைய தளம் மூலம் பதிவுக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், செயலாளர், பகுதி நேர பிஇ, பிடெக் சேர்க்கை, கோயம்புத்தூர் என்ற பெயரில் 10ம் தேதியில் இருந்து பெற்ற டிடி பெற்று பொறியியல் சேர்க்கை மையங்கள் மூலமாக செலுத்தலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் 5248 மாணவர்கள் விடுபட்டது ஏன்- அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

இணையதள வசதி இல்லாதவர்கள், விண்ணப்பம், டிடி ஆகியவற்றை சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம். பகுதி நேர பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சலிங் மூலம் நடத்தப்படும். இது குறித்து கூடுதல் விவரம் வேண்டுவோர் மேற்கண்ட இணைய தளத்தை காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது..

English summary
Tamilnadu part time BE admission 2020-21 Starts from today. diploma students can apply this till 30th august: Directorate of Technical Education
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X