• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'ஜெயிச்சி தான் பரிசு வாங்குவேன்..' சபதம்போட்டு பரிசை வென்ற சிறுமி.. கோவை ஜல்லிக்கட்டில் மாஸ் சம்பவம்

Google Oneindia Tamil News

கோவை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசு பெற மறுத்த இளம்பெண் யோகதர்ஷினியின் காளை கோவை ஜல்லிக்கட்டில் கலக்கியது.

  ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் கோரிக்கை | Thammampatti Jallikattu | Oneindia Tamil

  தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கிராமங்களில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

  தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

  Honey Trap தம்பதி: அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த மனைவி! வீடியோ எடுத்த கணவர்! கடைசியில் நடந்தது என்ன?Honey Trap தம்பதி: அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த மனைவி! வீடியோ எடுத்த கணவர்! கடைசியில் நடந்தது என்ன?

  ஜல்லிக்கட்டு போட்டிகள்

  ஜல்லிக்கட்டு போட்டிகள்

  தமிழ்நாட்டில் தற்போது ஓமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கோவா மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் அனுமதியில்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட 873 காளைகளை 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு களமாடினர்.

  வீர தமிழச்சி யோகதர்ஷினி

  வீர தமிழச்சி யோகதர்ஷினி

  இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளுக்கு அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக வழங்கப்பட்டன. குறிப்பாக, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை மாவட்டம், ஐராவதநல்லூரை சேர்ந்த யோகதர்ஷினி என்பவரது காளை மீது பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவியது. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் தந்தை முத்து பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

  அவனியாபுரம்

  அவனியாபுரம்

  ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்கப்பட்ட சமயத்தில் அதை எதிர்த்து தமிழ்நாடே போராடிய போது அதன் மீது யோகதர்ஷினிக்கு ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அவரது தந்தை மற்றும் அண்ணனுடன் சேர்ந்து ஜல்லிக்கட்டுக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தான் வளர்த்த காளையைக் களமிறக்கினார் யோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடிமாடாக போனது.

  ஆறுதல் பரிசு

  ஆறுதல் பரிசு

  அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக் குழுவினர் சிறப்புப் பரிசு வழங்க அழைத்தனர். ஆனால், அதனை வாங்க மறுத்து யோகதர்ஷினி அங்கிருந்து வெளியேறினார். குறிப்பாக விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியே மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வாங்கிச் செல்லும்படி கூறினார். ஆனாலும், பரிசினை வாங்காமல் சென்று விட்டார் யோகதர்ஷினி. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

  கோவையில் கலக்கிய முத்து கருப்பு

  கோவையில் கலக்கிய முத்து கருப்பு

  இந்த நிலையில் முத்து கருப்பு என்ற தனது காளையைக் கோவை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வந்தார் யோகதர்ஷினி. 529வது மாடாக யோகதர்ஷினியின் காளை முத்து கருப்பு களம் இறங்கியது. அப்போது யார் கைகளிலும் சிக்காமல் துள்ளிக் குதித்து ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, யோகதர்ஷினிக்கு சில்வர் அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தங்கக் காசு பரிசாகப் பெற்றுச் சென்றார்.

  English summary
  Teenager Yogadarshini's bull won in Coimbatore jallikattu. coimbatore jallikattu 2022 latest news in tamil.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X