கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களை நாங்க பார்த்துக்கிறோம்.. உங்களை சுமப்பதா எங்க வேலை.. பாஜகவுக்கு தம்பிதுரை பொளேர் அடி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமந்து செல்லாது- தம்பிதுரை- வீடியோ

    கோவை: தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமந்து செல்லாது என்றும், அதிமுகவினர் பாவம் செய்யவில்லை என்றும், அக்கட்சி மூத்த தலைவரும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை காட்டமாக தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தம்பிதுரை, இன்று கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தம்பிதுரை கூறியதை பாருங்கள்.

    சதி நடக்குது

    சதி நடக்குது

    ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கோடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் புனையப்பட்ட நாடகம். அரசியல் சதிக்காக, தவறான செய்தி மூலம் பிளெக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை சீர்குலைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது. தமிழக முதல்வர் மீது அவதூறு கிளப்பும் கோடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது.

    ஸ்டாலின் பஞ்சாயத்து விசிட்

    ஸ்டாலின் பஞ்சாயத்து விசிட்

    பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் திமுக வெற்றி பெறாது. குட்கா, கோடநாடு என அதிமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர் காய்வதே திமுகவின் கொள்கை.

    மத்திய அரசில் இடம்பெற முயற்சி

    மத்திய அரசில் இடம்பெற முயற்சி

    ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்?, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென திமுக முயல்கிறது. இதுதான் காரணம்.
    ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது.
    குருமூர்த்தி விளம்பரத்திற்காக பேசுகிறார்.

    பாவம் செய்யலியே

    பாவம் செய்யலியே

    அதிமுகவை மேலும் வளர்க்க நாங்கள் பாடுகிறோம். பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். பாஜகவை சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா?, பாஜகவை காலுன்ற வைக்க அதிமுகவினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அதிமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள்.

    English summary
    AIADMK leader Thambidurai says, his party won't lift BJP on their shoulder to grow in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X