கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதான் மறக்க வேண்டிய சம்பவமாயிற்றே.. பிறகு ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பேசினீர்?.. ரஜினிக்கு கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    கோவை: மறக்க வேண்டிய சம்பவத்தை ஏன் 50 ஆண்டுகளுக்கு பின்னர் பேசினார் என தந்தை பெரியார் திராவிட கழகத் தலைவர் கு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

    துக்ளக் விழாவில் ரஜினிகாந்த், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த ரஜினிகாந்த் தனது கருத்து சரிதான் என்றும் தான் எதையும் கற்பனை செய்து பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும் திராவிடர் கழகத்தினர் கோருவது போல் தான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க முடியாது என தெரிவித்தார்.

     ரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி ரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி

    மறுக்க வேண்டியதில்லை

    மறுக்க வேண்டியதில்லை

    இதுகுறித்து மேலும் மேலும் செய்தியாளர்கள் கேட்ட போது ஒரு சில விஷயங்கள் மறுக்க வேண்டிய சம்பவமில்லை. மறக்க வேண்டிய சம்பவம் ஆகும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

    அவதூறு

    அவதூறு

    இதுகுறித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கு ராமகிருஷ்ணன் கூறுகையில் ரஜினி காட்டிய பத்திரிகையில் ராமர், சீதை படங்கள் அவதூறான வகையில் இல்லை.

    பாஜகவுக்காகத்தான்

    பாஜகவுக்காகத்தான்

    மறக்க வேண்டிய சம்பவத்தை ரஜினி 50 ஆண்டுகளுக்கு பின்னர் ஏன் பேச வேண்டும்? ரஜினிக்கு முட்டுக் கொடுக்கும் வகையில் பேசி இருக்கிறார் எச் ராஜா. பாஜகவிற்காகத்தான் நடிகர் ரஜினிகாந்த் இப்படி பேசியுள்ளார்.

    ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டம்

    மறக்க வேண்டிய சம்பவம் என கூறியதன் மூலம் இப்போதுதான் இறங்கிவந்துள்ளார். போக போக ரஜினி நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என ராமகிருஷ்ணன் கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Thanthai Periyar Dravidar Kazhagam Chief K. Ramakrishnan asks Rajinikanth Why he talked about the incident which was happened before 50 years?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X