கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்களிடம் கருத்து கேட்டுதான் சட்டத்தை இயற்ற வேண்டுமா?... கேட்கிறார் வானதி சீனிவாசன்

மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது எனவும் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கள் மக்கள் கருத்து கேட்காமலே சட்டத்தைக் இயற்றலாம் என்று பாஜக துணைத்தலைவர

Google Oneindia Tamil News

கோவை: மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என்று பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கள் மக்கள் கருத்து கேட்காமலே சட்டத்தைக் இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கு எதிராக பந்த், மறியல் ஆகியவற்றை விவசாயிகள் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

The government can pass any law without consulting the people says BJP Vanathi Srinivasan

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேளாண் சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பு மற்றும் விளக்க ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இதில் பாஜக துணை தலைவர் கனகசபாபதி, வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.நாகராஜ், இந்த மசோதா குறித்து விவசாயிகளிடம் எதிர்கட்சிகள் வேண்டுமென்றே தவறான கருத்துகளை பரப்புவதாக குற்றம் சாட்டினார். நாளை மறுதினம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நடத்த உள்ள ஆர்ப்பாட்டம் வெற்று அரசியல் எனவும் தெரிவித்தார். வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல்- ஹெச். ராஜாவுக்கு மீண்டும் தேசிய செயலாளர் பதவி இல்லை பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல்- ஹெச். ராஜாவுக்கு மீண்டும் தேசிய செயலாளர் பதவி இல்லை

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், பாரத பிரதமர் நரேந்திர மோடி தொழில்துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்தை விட விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறினார். மத்திய அரசு விவசாயிகள் எதிர்ப்புகள் தெரிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது எனவும் தெரிவித்தார்.

மக்களிடம் கருத்து கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது எனவும் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கள் மக்கள் கருத்து கேட்காமலே சட்டத்தைக் இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

வேளாண் மசோதா குறித்து அதிமுக ராஜ்யசபா எம்பி எஸ்ஆர். பாலசுப்ரமணியம் கூறியுள்ள கருத்துக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார் என்றும் கூறினார் வானதி சீனிவாசன்.

English summary
BJP vice-president Vanathi Srinivasan has said that no law can be enacted if it wants to legislate only after consultation with the people and that elected governments can enact legislation without consulting the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X