கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்ப போறேன் ஆனா திரும்பி.. வர மாட்டேனு சொன்னேன்.. டாப்சிலிப் காட்டில் விடப்பட்ட கோவை சிறுத்தை

Google Oneindia Tamil News

கோவை : கோவை 5 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை பிடிபட்ட நிலையில், அதனை டாப்சிலிப் வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டுள்ளனர்.

Recommended Video

    இப்ப போறேன் ஆனா திரும்பி.. வர மாட்டேனு சொன்னேன்.. டாப்சிலிப் காட்டில் விடப்பட்ட கோவை சிறுத்தை

    கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் சிறுத்தை ஒன்று வெளியேறியது. சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சிறுத்தை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நுழைந்தது.

    இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் அந்த சிறுத்தை சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

    'ஜெயிச்சி தான் பரிசு வாங்குவேன்..' சபதம்போட்டு பரிசை வென்ற சிறுமி.. கோவை ஜல்லிக்கட்டில் மாஸ் சம்பவம் 'ஜெயிச்சி தான் பரிசு வாங்குவேன்..' சபதம்போட்டு பரிசை வென்ற சிறுமி.. கோவை ஜல்லிக்கட்டில் மாஸ் சம்பவம்

    பொதுமக்கள் அச்சம்

    பொதுமக்கள் அச்சம்

    பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டனர். சிறுத்தை சுற்றித்திரியும் இடங்களில் வலைகளை வைத்தும் கூண்டுகள் மூலமும் சிறுத்தையை பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

    சிறுத்தை சிக்கியது

    சிறுத்தை சிக்கியது

    ஐந்து நாட்கள் போராடியபோதும் கூண்டில் சிறுத்தை போக்கு காட்டி வந்தது. சிறுத்தையை சுட்டுப்பிடிக்க விருப்பம் இல்லாத நிலையில் அதனை உயிருடன் பிடிக்க வனத்துறையினர் காத்திருந்தனர். கடும் பட்டினியோடு சுற்றித்திரிந்த சிறுத்தை உணவு தேடி குடோனில் இருந்து வெளியேற முயன்றபோது நேற்று நள்ளிரவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது.

    மக்கள் நிம்மதி

    மக்கள் நிம்மதி

    கூண்டிற்குள் இறைச்சி தண்ணீர் சேவல் உள்ளிட்டவை வைத்ததால் அவற்றை உண்ண வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியதை அடுத்து கூண்டை வனத்துறையினர் அடைத்தனர். கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியதை அடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் சிறுத்தையை விட முடிவு செய்யப்பட்டது.

    டாப்சிலிப் வனப்பகுதி

    டாப்சிலிப் வனப்பகுதி

    இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் வனத்துறைக்கு சொந்தமான வாகனம் மூலம் சிறுத்தையுடன் இருந்த கூண்டு கோவை அருகே உள்ள டாப் சிலிப் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அடர்ந்த காட்டுப் பகுதியில் சிறுத்தை இருந்த கூண்டை வனத்துறையினர் திறந்து விட்டனர் கூண்டில் இருந்து திறந்துவிடப்பட்ட அந்த சிறுத்தை சீறிப்பாய்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் ஓடியது இதைப் பதிவு செய்துள்ள வனத்துறையினர் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    English summary
    Coimbatore: A leopard that had been infiltrating residential areas in Coimbatore for 5 days was caught by the forest department and left in the Topslip forest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X