கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படியா, நிஜமாவா.. நம்பவே முடியலையே!

Google Oneindia Tamil News

Recommended Video

    இவ்வளவு வசதி கொடுத்ததும் மத்திய அரசின் விழாவுக்கு யாரும் வரலையே !- வீடியோ

    கோவை: கோவையில் இன்று நடந்த மத்திய விழாவில் கூட்டமே சேராமல் போனதால் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அப்செட் ஆகியுள்ளார்.

    இந்தியா முழுவதும் இன்று மத்திய அரசு தனது நகர எரிவாயு விநியோகத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இதைத் தொடங்கி வைத்தார். மொத்தம் 129 மாவட்டங்களில் 65 நகரங்களில் இது நேரடியாக தொடங்கி வைக்கப்பட்டது.

    Thin attendance of participants upset Union minister

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில் தூய்மையான எரிபொருள் பயன்படுத்தும் நாடாக மாற்றுவதில் உறுதியாக உள்ளோம். எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம். இது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயன் தரும் என்றார்.

    இந்த நிகழ்ச்சி கோவையிலும் நடந்தது. அதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். கோவை கொடீசியா அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சிக்கு மிக மிக குறைவான நபர்களே வந்திருந்தனர். விரல் விட்டும் எண்ணும் அளவுக்கே கூட்டம் இருந்ததால் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அப்செட் ஆகி விட்டார்.

    பரந்து விரிந்திருந்த அரங்கில் கூட்டமே இல்லாமல் வெறும் சேர்களாக காணப்பட்டது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கூட்டத்தில் வருபவர்களுக்காக (சபரிமலை சீசனாக இருந்தாலும் பரவாயில்லை என்று) மதியம் அசைவ சாப்பாட்டுக்கும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மக்கள் மொத்தமாக ஏமாற்றி விட்டனர்.

    English summary
    Prime Minister Narendra Modi laid the foundation stones of City Gas Distribution Projects in 65 Geographical Areas in 129 Districts from New Delhi today. In Coimbatore function hardly 200 hundred people only attended the same.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X