கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

4 நாள் காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசு.. பல விஷயங்களை கறந்த சிபிசிஐடி போலீஸ்!

4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை முடிந்து திருநாவுக்கரசு சிறையில் அடைக்கப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பொள்ளாச்சி வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது- வீடியோ

    கோவை: கடந்த 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசுவிடம் விசாரணை நடத்தியதில் ஏகப்பட்ட விஷயங்களை சிபிசிஐடி போலீசார் கறந்துள்ளார்களாம்!
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ வசம் செல்கிறது. இருந்தாலும் வழக்கு விசாரணை மாற்றப்படும் முன், சிபிசிஐடி போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். எஸ்.பி நிஷா பார்த்திபன் தலைமையில் இந்த விசாரணை ஆரம்பமானது.

    அதன்படி கடந்த தினங்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீடு, பண்ணை வீடு என மாறி மாறி ஆய்வு நடத்தப்பட்டது.

    எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்! எல்லாம் சரி.. அந்த 1500 வீடியோ எங்கே?.. யார் கிட்ட இருக்கு.. பெரும் கவலையில் மக்கள்!

    பண்ணை வீடு

    பண்ணை வீடு

    நேற்றுகூட "தேர்வு முடிவுகள்" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக சிபிசிஐடி போலீசார்கள் பண்ணை வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்கள்.

    லேப்டாப்

    லேப்டாப்

    வீடு முழுவதும் ஆய்வு செய்ததுடன், நிபுணர் குழுவை வைத்து அந்த வீட்டின் வரைபடங்களையும் வரைந்த எடுத்து சென்றார்களாம். வீட்டிலிருந்தும் லேப்டாப், பென்டிரைவ் போன்றவற்றைகளை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    திடுக் தகவல்கள்

    திடுக் தகவல்கள்

    மேலும் திருநாவுக்கரசிடம் 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசாரணை தொடங்கியது. இந்த 4 நாட்களில் பல முக்கிய விஷயங்களையும், திடுக் தகவல்களையும் திருநாவுக்கரசு போலீசாரிடம் வாக்குமூலமாக சொல்லியதாக கூறப்படுகிறது.

    சிறையில் அடைத்தனர்

    சிறையில் அடைத்தனர்

    இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி நாகராஜ் வீட்டில் போலீசார் திருநாவுக்கரசை ஆஜர்படுத்தி, பிறகு கோவை சிறையில் அடைத்தனர்.

    English summary
    Kovai CBCID Police Police 4 days detained over Thirunavukarasu in Pollachi Gang Rape Case
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X