கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது

Google Oneindia Tamil News

Recommended Video

    Three new train services from coimbatore to be inaugurated

    கோவை: தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் இன்று தொடங்கியது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, கோவை-பழனி ஆகிய ரயில் சேவைகளை மத்திய ரயில் அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    கோவை மற்றும் பழனி, சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, ஆகிய வழித்தடங்களில் இடையே புதிய ரயில் சேவை வரும் 16ம் தேதி முதல் ஆரம்பம் ஆக உள்ளது. சேலம்- கரூர், கோவை-பொள்ளாச்சி, வழித்தடங்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை 6 நாள்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேநேரம் கோவை மற்றும் பழனி இடையே வாரத்தின் 7 நாட்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

    Three new train services to begin today in tamil nadu

    இந்த ரயில் சேவைகளை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி வைத்தார்.

    பழனி கோவை ரயில் விவரம்: பழனியில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும் ரயில், உடுமலையில் 11.32 மணிக்கும், பொள்ளாச்சியில் 12.20 மணிக்கும் புறப்படும், கிணத்துக்கடவில் இருந்து 12.47க்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.25க்கு புறப்படும். கோவைக்கு பகல் 2.10 மணிக்கு சென்றடையும்.


    கோவை பழனி ரயில் விவரம்: கோவையில் இருந்து பகல் 1.45 மணிக்கு புறப்படும் ரயில் போத்தனூரில் 1.57 மணிக்கும், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் பகல் 2.25 மணிக்கும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பிற்பகல் 3 மணிக்கும் புறப்படும். உடுமலைக்கு 3.45 மணிக்கும் பழனிக்கு மாலை 4.40க்கு சென்றடையும். கோவை பழனி இடையே இந்த ரயில்கள் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.

    English summary
    Three new train services Salem - Karur, Coimbatore - Pollachi, Coimbatore - Palani to begin today in tamilnadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X