கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாட்ஜில் ரூம் போட்ட "ஆண்ட்டி".. அந்தரங்க வீடியோ எடுத்து.. கடைசியில் சிக்கியது யாருன்னு பார்த்தீங்களா

தொழிலதிபரிடம் பணம் பறித்த 3 பேர் கைதானார்கள்

Google Oneindia Tamil News

கோவை: லாட்ஜில் ரூம் போட்டு.. அந்தரங்க வீடியோவையும் எடுத்து வைத்து கொண்டு, பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது.. ஆனால் இதில் ஒரே ஒரு வித்தியாசம்.. லாட்ஜில் ரூம் போட்டு அந்தரங்க வீடியோவையும் எடுத்துவைத்து மிரட்டியது ஒரு பெண்.. அந்தரங்க வீடியோவில் சிக்கியது ஒரு ஆண்...!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசிம்மன்... சொந்த ஊர் ஆந்திரா.. கோயம்புத்தூரில் பிசினஸ் செய்கிறார்.. கடந்த 2018-ல் உமாராணி என்ற பெண் மேட்ரிமோனியல் மூலம் ராஜசிம்மனுக்கு அறிமுகமாகி உள்ளார்.. இவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவராம்... உமாராணிக்கு கல்யாணமாகிவிட்டது.

ஆனால், தொழிலதிபர் ராஜசிம்மன் மீது ஒரு கண் வைத்துவிட்டார்.. எனவே, கல்யாணமானதை மறைத்துவிட்டு, ராஜசிம்மனிடம் நெருக்கமாக பழகி உள்ளார்.. ஹைதராபாத்தில் ஒரு லாட்ஜில் ரூம் போட்ட உமாராணி, ராஜசிம்மனை அங்கு வரவழைத்துள்ளார்.

ஆபாசம்

ஆபாசம்

பிறகு தன்னை அந்தரங்கமாகவும், ஆபாசமாகவும் வீடியோ எடுத்து மிரட்டியதாக ராஜசிம்மன் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் ஸ்டேஷனில் உமாராணி புகார் தந்தார்.. அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ஆய்வாளர் விசாரித்துள்ளார்.. ராஜசிம்மன் பிசினஸ் செய்வது தெரிந்ததும், திடீரென கட்டப்பஞ்சாயத்து செய்து, 28 லட்சம் ரூபாய் வரை மிரட்டி வசூலித்து விட்டார்..

துணிச்சல்

துணிச்சல்

இப்படி ஒரு துணிச்சலான காரியத்துக்கு விஷ்ணுபிரியா என்ற பெண்ணும் உடந்தையாக இருக்கிறார்.. இந்த விஷ்ணுபிரியா யார் என்றால், அவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டவராம்.. இறுதியில் ராஜசிம்மனை கைது செய்த ஆயிரம் விளக்கு போலீசார், ஜெயிலிலும் அடைத்துவிட்டனர்... முன்னதாக, ஜெயிலுக்கு போகும்முன், ராஜசிம்மனின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என மொத்தத்தையும் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் பிடுங்கி கொண்டார்.. பேங்கில் இருந்து இஷ்டத்துக்கு பணம் எடுத்து செலவு செய்தும் வந்தார்.

விசாரணை

விசாரணை

இந்நிலையில், ராஜசிம்மன் ரிலீஸ் ஆகி வெளியே வந்தார்.. உடனடியாக ஞானசெல்வம், உமாராணி, விஷ்ணுபிரியா என 3 பேர் மீதும் ஒரு புகார் மனு தந்தார்... அதற்குரிய ஆதாரங்களையும் ஆந்த மனுவுடன் இணைத்து தந்தார். வழக்கும் விசாரணைக்கு விந்தது.. அப்போதுதான் உமாராணி முதலில் சிக்கினார்.. லாட்ஜில் ரூம் போட்டது முதல் அவர் செய்த அனைத்து தில்லாலங்கடி விஷயங்களும் வெளிச்சத்துக்கு வந்தன.

நடவடிக்கை

நடவடிக்கை

அடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஞானசெல்வமும், விஷ்ணுபிரியாவும் சிக்கி உள்ளனர்.. இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த விஷ்ணுபிரியா சென்னையை சேர்ந்தவர்.. பியூட்டி பார்லர் நடத்தி வருகிறாராம்.. உமாராணி ராஜசிம்மனை விரும்பிய நேரத்தில்தான், இவரும் ராஜசிம்மன் மீது ஆசைப்பட்டுள்ளார்.. இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர, இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லையாம்.

English summary
Three people arrested for cheating Kovai Businessman
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X