கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்துமதி, பராசக்தி, செல்வி.. 3 தேவிகளின் திருவிளையாடல்.. ஆடிப் போன போலீஸ்.. மாட்டி விட்ட சிசிடிவி

நகை திருடிய 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

கோவை: கோயில் திருவிழாவில் இந்த மூன்று தேவிகளின் திருவிளையாடல்களை கண்டு கோவை போலீசார் அதிர்ந்து விட்டனர்!

கோவை கோணியம்மன் கோயில் தேர்திருவிழா வெகு பிரசித்தம்.. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் கடந்த 4-ம் தேதி தேர்விழா நடந்தது.. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மொத்தம் 10 பெண்களின் நகைகள் அபேஸ் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும் சிசிடிவி கேமிராவிலும் ஆய்வு செய்தபோதுதான் 3 பெண்கள் சிக்கினர்.

3 சகோதரிகள்

3 சகோதரிகள்

இந்துமதி... பராசக்தி... செல்வி ஆகியோர்தான் அவர்கள்.. 3 பேருமே சகோதரிகள்.. இந்துமதிக்கு 27 வயது, பராசக்திக்கு 35 வயது, செல்விக்கு 36 வயது.. சொந்த சகோதரிகள் இல்லை.. ஆனால் நெருங்கிய உறவினர்கள்.. அக்கா - தங்கை முறை.. சின்ன வயசில் இருந்தே திருடி பழக்கப்பட்டுள்ளனர்... இவர்களுக்கு குறி கோயில் திருவிழாதான்.. எந்த ஊர் கோயில் திருவிழா என்றாலும் இந்த முப்பெரும் தேவிகள் அங்கு ஆஜராகிவிடுவார்கள்.. இப்படி திருடி திருடியே சென்னை திருவான்மியூரில் சொந்தமாக ஒரு விடே கட்டி இருக்கிறார்களாம்.

தேர் திருவிழா

தேர் திருவிழா

3 பேருக்கும் கல்யாணமும் ஆகிவிட்டது.. தனித்தனியாக வாழந்து வருகிறார்கள்.. அதுவும் ஃபாரீனில் வாழ்கிறார்கள்.. பராசக்தி இலங்கை, செல்வி லண்டன், இந்துமதி கேரளா என செட்டில் ஆகி விட்டனர்.. ஆனாலும் திருட்டு புத்தி போகவே இல்லை.. எந்த ஊரில் தேர் திருவிழா நடக்கும் என்று இந்துமதியின் கணவர் பாண்டியராஜனுக்கு தெரியுமாம்.

டூரிஸ்ட் விஸா

டூரிஸ்ட் விஸா

இதே வேலையாக ஆன்லைனில் தேடி கொண்டே இருப்பாராம்.. தகவல் தெரிந்ததும் 3 பேருக்கும் சொல்வார்.. அவர்களும் இதற்காக ஃபிளைட் பிடித்து கொண்டு வந்து விடுவார்களாம். டூரிஸ்ட் விசாவில் சென்னை வந்து தங்கி, பிறகு எங்கு கொள்ளை அடிக்க போகிறோமோ அங்கு கிளம்பி செல்வார்களாம்.. அந்த திருவிழா நடக்கும் ஊரிலேயே ஒரு லாட்ஜில் ரூம் போட்டு... முன்னதாக நோட்டம் போடுவது நடக்குமாம்.

பக்தி பரவசம்

பக்தி பரவசம்

சாமியை பார்த்ததும் பக்தி பரவசத்தில் பெண்கள் திளைக்கும்போது படக்கென நகைகளை அறத்து விடுவார்கள்.. ஆளாளுக்கு ஒரு பக்கம் சென்று நகையை திருடி கொண்டு, கடைசியாக ஒன்றுசேர்ந்து கிளம்பிவிடுவார்களாம். அதாவது ஒரு திருவிழாவில் 100 சவரனாவது ஆட்டைய போடுவார்களாம்.. தஞ்சை குடமுழுக்கு விழாவைகூட விட்டு வைக்கவில்லை இவர்கள்.

Recommended Video

    கோவில்களின் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது
    கைது

    கைது

    கோவையில் நடந்த திருவிழாவில் 35 சவரன் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.. மீதி 15 சவரன் நகை பாண்டியராஜனிடம் உள்ளது.. அவரை போலீசார் தேடி வருகறிர்கள். இந்த கொள்ளையடித்த நகைகளை விற்று காசாக்கி அதன்பிறகு ஃபிளைட் பிடித்து அவங்கவங்க நாடுகளுக்கு சென்றுவிடுவார்களாம். பல வருஷமாக இதே பொழப்பாக இருந்த இந்த 3 அபூர்வ சகோதரிகள் கம்பி எண்ணி கொண்டு உள்ளனர்.

    English summary
    three sisters arrested in theft case chennai and inquiry is going on it
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X