கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீட் தேர்வு நடத்துவோம் என்று பியூஷ்கோயல் சொன்னபோது வேடிக்கை பார்த்தது யார்.. கேஎஸ் அழகிரி கேள்வி

நீட் தேர்வு மற்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரம் குறித்து கேஎஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோவை: நீட் தேர்வு நடத்துவோம் என்று அன்று பியூஷ்கோயல் சொன்னபோது, அதிமுக கூட்டணி கட்சியினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு காலதாமதம் செய்வதற்கு காரணமே தோல்வி பயம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கே.எஸ்.அழகிரி கோவை வந்தபோது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

"சாதனை என்று எதையும் கேட்க பிரதமரால் முடியவில்லை. அதனால்தான் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிவருகிறார். வாக்கு கேட்டு வருவதற்கு பதிலாக ராகுல் காந்தியை பற்றி அவதூறுகளைதான் பேசி வருகிறார் பிரதமர் மோடி.

சினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சினிமாவுல மார்க்கெட் போயாச்சி.. அதான் கமல் அரசியலுக்கு வந்துட்டாரு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ராணுவ நடவடிக்கை

ராணுவ நடவடிக்கை

காங்கிரஸார் தன்னை கொல்ல முற்படுவதாகவும், ராகுல் காந்தி வேறு நாட்டு குடியுரிமை பெற்றுள்ளதாகவும் பொய் பிரச்சாரமும் செய்கிறார். புல்வாமா விவகாரத்தில் பிரதமர் மோடி ராணுவ நடவடிக்கைகளை மாற்றி அமைத்ததால்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

தமிழிசை சவுந்தரராஜனுக்கு வரலாறு தெரியவில்லை. தானே புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்டது உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம்தான். ஆனால், கஜா புயல் பாதிப்பு குறித்து பா.ஜனதா சார்பில் ஒரு நிர்வாகி கூட வாய் திறக்கவில்லை.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணி

நீட் தேர்வு நடத்த விருப்பம் இல்லாத மாநிலங்களுக்கு, அதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் நீட் தேர்வு நடத்துவோம் என்று அன்று பியூஷ்கோயல் தமிழகத்தில் சொன்னபோது, அதிமுக கூட்டணி கட்சியினர் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

50 எம்பிக்கள்

50 எம்பிக்கள்

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவை, மாநிலங்களவையில் 50 எம்பிக்களை அதிமுக வைத்திருந்தும், இந்த தீர்மானம் இன்னும் குடியரசுத் தலைவர் பார்வைக்கு இதுவரை செல்லவில்லை.

அமைச்சரவை

அமைச்சரவை

3 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயக போக்கு கிடையாது. மத்திய அரசுடன் சேர்ந்து, தமிழக அரசும் மக்கள் விரோதப் போக்கையே கடைப்பிடிக்கிறது. மத்தியில் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு வரும் எம்பி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

அதே சமயத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக படுதோல்வி அடையும். இந்த பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டு தள்ளி போடப்பட்டு வருகிறது.

English summary
TN Congress Leader KS Azhagiri has criticized PM Modi and Tamilisai Soundarajan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X