கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்பார்ந்த மக்களே! கோவை டாஸ்மாக் கடையில் முதல் 2 டோக்கன்களை 2 ஸ்பெயின் குடிமகன்கள் தட்டி சென்றனர்!

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தின் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு டோக்கன் மற்றும் ஆன்லைன் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் மதுபான கடை ஒன்றின் முதல் 2 டோக்கன்களை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இரு குடிமகன்கள் பெற்றிருக்கின்றனர்.

Recommended Video

    முதல் 2 TASMAC Token-களை தட்டிச்சென்ற 2 Spain குடிமகன்கள்

    கொரோனா எனும் உயிரைக் குடிக்கும் தொற்று நோய் பரவுவதைத் தடுக்க 40 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுபான கடைகள் அனைத்தும் நாடு முழுவதும் மூடப்பட்டன.

    இந்த லாக்டவுன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. இதனால் நாடு முழுவதும் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

    அலைமோதும் கூட்டம்.. டாஸ்மாக்களில் ஜோராக தொடங்கிய மதுவிற்பனை.. தமிழகம் முழுக்க போலீஸ் குவிப்பு! அலைமோதும் கூட்டம்.. டாஸ்மாக்களில் ஜோராக தொடங்கிய மதுவிற்பனை.. தமிழகம் முழுக்க போலீஸ் குவிப்பு!

    செம விற்பனை

    செம விற்பனை

    40 நாட்களுக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் ஒவ்வொரு மாநிலத்திலும் குடிமகன்கள் பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். பெண்களும் தனிவரிசையில் நின்று காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் நாளொன்றுக்கு ரூ100 கோடி அளவுக்கு மதுவிற்பனை களைகட்டுகிறது.

    தமிழகத்திலும் திறப்பு

    தமிழகத்திலும் திறப்பு

    இந்த நிலையில் தமிழகத்திலும் இன்று காலை முதல் டாஸ்மாக் மதுபான விற்பனை தொடங்கிவிட்டது. இதற்காக நேற்று மதுபான கடைகள் வாழை தோரணங்களுடன் தயாராகிவிட்டன. அத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நீண்ட தொலைவுக்கு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் திறப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் கூட தள்ளுபடி செய்யப்பட்டது.

    டோக்கன், ஆன்லைன் முறை

    டோக்கன், ஆன்லைன் முறை

    தற்போது தமிழகத்தில் முதல் முறையாக டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஆன்லைன் முறையும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் பணம் கட்டி பெறப்பட்ட ரசீதை டாஸ்மாக் கடையில் காட்டினால் 2 பாட்டில்கள் வழங்கப்படுமாம். நேரில் செல்வோருக்கு ஒரே ஒரு பாட்டில்தான் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால் இன்றைய விற்பனையில் இந்த நிபந்தனை காணாமல் போயிருந்தது.

    ஸ்பெயின் குடிமகன்களுக்கு டோக்கன்

    ஸ்பெயின் குடிமகன்களுக்கு டோக்கன்

    கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபான விற்பனையில் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. மதுபான விற்பனைக்கான டோக்கன்களை இரு ஸ்பெயின் நாட்டு குடிமகன்கள் பெற்றனர். கோர்சே , பெர்பைன் ஆகிய இரு ஸ்பெயின் நாட்டவருக்குத்தான் இந்த முதல் டோக்கன் கிடைத்தது. அவர்கள் உற்சாகமாக மதுபானம் வாங்க சென்ற காட்சியை பார்க்க முடிந்தது. அதேநேரத்தில் பல இடங்களில் மதுபான கடை திறப்புக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன.

    English summary
    TamilNadu Govt has introduced the Token System, Online payment in TASMAC Liqour Shops.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X