கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்மொழிக் கொள்கை விவகாரம்.. கோவை மாநகராட்சி ஆணையர் டிரான்ஸ்பர்.. பல அதிகாரிகள் இடமாற்றம்!

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி திணிப்பு குறித்த புகார் இவர் மீது வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று முக்கியமான ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். முக்கிய பொறுப்புகளில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு அந்த பொறுப்பில் புதிய ஐஏஎஸ் அதிகாரிங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமரவேல் பாண்டியன் கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இணைய தளத்தில் வெளியான விண்ணப்பமே போலி.... ஒரே போடு போட்ட கோவை மாநகராட்சி ஆணையர் இணைய தளத்தில் வெளியான விண்ணப்பமே போலி.... ஒரே போடு போட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில் அரசு பள்ளி விண்ணப்ப படிவத்தில் இந்தி ? கோவை ஆணையர் பரபர பதில்

வைரல் சர்ச்சை

வைரல் சர்ச்சை

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரவேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கோவை மாநகராட்சி பள்ளிகளில் இந்தி திணிப்பு குறித்த புகார் ஷர்வன்குமார் மீது வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுக்க இந்த சம்பவம் பெரிய விவாதங்களை ஏற்படுத்தி இருந்தது. மாநகராட்சி பள்ளிகளில் இந்தி திணிப்பு குறித்த விண்ணப்பம் ஒன்று இணையத்தில் வைரலாகி சர்ச்சையானது ,

மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

மாற்றம் செய்யப்பட்டுள்ளார்

தான் ஆணையராக பொறுப்பேற்ற பின் இப்படி எங்கும் இந்தி திணிக்கப்படவில்லை, இப்படி எங்கும் நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று ஷர்வன்குமார் விளக்கம் அளித்து இருந்தார். எந்த பள்ளிகளிலும் இந்தியை நான் திணிக்கவில்லை என்று ஷர்வன்குமார் விளக்கம் அளித்து இருந்தார். இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் அவர் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பழனி கோவில்

பழனி கோவில்

தமிழக வேளாண் துறை துணைச் செயலாளராக ஷர்வன்குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்னொரு பக்கம், பழனி கோயில் நிர்வாக அதிகாரி ஜெயபால் ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர் கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

கிருஷ்ணகிரி ஆட்சியராக பிரபாகர் இருந்த நிலையில் தற்போது இவர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில், விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறை கவனம் பெற்றுள்ள நிலையில் இந்த இடமாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இனி அடிக்கடி அரசின் மூத்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
TN govt shuffles Coimbatore Corporation Commissioner and Krishangiri Collector and few more officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X