கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வு சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Google Oneindia Tamil News

கோவை: மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வால் கொரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதாரத்துறையினருக்கு பெரும் சவால் ஏற்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மத்திய அரசின் இ பாஸ் முறை தளர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு - சுகாதாரத்துறைக்கு பெரும் சவால்: அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ பாஸ் முறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து இ பாஸ் பெறுவது மிகவும் எளிமையாக்கப்பட்டது.

    இருப்பினும் இதிலும் முறைகேடுகள் நிகழ்கின்றன என்பது குற்றச்சாட்டு. இந்த நிலையில் இ பாஸ் முறையை கைவிட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று புதுவை அரசு இ பாஸ் முறையை ரத்து செய்தது.

    TNPSC தேர்வுகளை அடியோடு ஒழிக்கப் போகிறது மத்திய அரசின் பொதுதேர்வு- வைகோ TNPSC தேர்வுகளை அடியோடு ஒழிக்கப் போகிறது மத்திய அரசின் பொதுதேர்வு- வைகோ

    அமைச்சர் ஆய்வு

    அமைச்சர் ஆய்வு

    ஆனால் தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்யப் போவதில்லை என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் கோவையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சச்ர் வேலுமணி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

    பிளாஸ்மா வங்கி

    பிளாஸ்மா வங்கி

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களில் 8, 532 பேர் குணமடைந்துள்ளனர்.

    காய்ச்சல் முகாம்கள்

    காய்ச்சல் முகாம்கள்

    மாவட்டத்தைப் பொருத்தவரை குணமடைவோரின் விகிதம் 78% உள்ளது‌. கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 100 மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 6,112 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டதில் 1,902 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    ஆன்லைன், எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட்

    ஆன்லைன், எஸ்எம்எஸ் மூலம் ரிசல்ட்

    கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 5,821 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா பரிசோதனை மற்றும் படுக்கை வசதிகள் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கொரோனா தொற்றைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைன் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இ பாஸ் தளர்வுக்கு எதிர்ப்பு

    இ பாஸ் தளர்வுக்கு எதிர்ப்பு

    மத்திய அரசு இ பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதார துறையினருக்கு சாவலானது. தனியார் மருத்துவமனைகள் கடைசி நேரத்தில் நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால் நோட்டீஸ் வழங்கப்படும். தமிழ்நாட்டில் 25 சித்தா மருத்துவ மையங்களில் அறிகுறி இல்லாமல் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஒரு சித்தா மருத்துவ மையம் ஏற்படுத்தப்படும். கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்க, இணை நோய்கள் மற்றும் பிற நோய்கள் இருப்பதே காரணம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    English summary
    Tamilnadu Health Minister Vijayabaskar has opposed to the Centre's E Pass Relaxations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X