• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஒரே "அலறல்" சத்தம்.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள்.. 4 வயசு பிஞ்சுவை.. கோவை கொடூரம்!

|

கோவை: கொடுமையை பாருங்க.. 4 வயசு பிஞ்சுவை ராத்திரி பகல் என்று பார்க்காமல் கொடூரமாக தாக்கி உள்ளனர் வளர்ப்பு பெற்றோர்.. அந்த குழந்தைக்கு உடம்பெல்லாம் ரத்த காயங்கள் உள்ளன.. போத்தனூரே மிரண்டுபோய் இருக்கிறது..!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா - நஜும் ஷா தம்பதியினர்.. இவங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப வருஷம் ஆகியும் குழந்தைகள் பிறக்க வஇல்லை.

அதனால், வேறு ஒரு தம்பதியின் 4 வயசு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.. அந்த குழந்தையை இஸ்லாமுக்கு பெயர் மாற்றி வளர்த்து வந்தனர்.

பாசம்

பாசம்

இந்த நிலையில் நஜும் ஷா திடீரென கர்ப்பமானார்.. அதனால் அந்த வளர்ப்பு குழந்தையை கவனிப்பதையும் விட்டுவிட்டார்... பாசமும் காட்டுவதில்லை.. நாளுக்கு நாள் வெறுப்பை உமிழ்ந்தனர்.. ஒருகட்டத்தில் தம்பதி, இருவரும் அந்த குழந்தையை அடிக்க ஆரம்பித்தனர்.. அதிலும் 2 பேருமே கடுமையாக போட்டு அந்த பிஞ்சுவை தாக்குவார்களாம்.

அலறல்

அலறல்

இதனால் குழந்தையின் அலறல் அக்கம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுள்ளது.. நிலைமையை உணர்ந்து கொண்டு ஆத்திரமும் அவர்களுக்கு வந்துள்ளது.. இதனால், குழந்தையின் அலறலைதினம் தினம் கேட்க முடியாமல், நேரடியாக வந்து தம்பதியிடம் இதை பற்றி கேட்டுள்ளனர்.. பலமுறை அட்வைஸ் தந்துள்ளனர்.. ஆனாலும் 2 பேரும் அடங்கவே இல்லை.

கேமரா

கேமரா

அப்படித்தான் கடந்த வெள்ளிக்கிழமை ராத்திரியும் குழந்தை அலறினாள்.. இதனால், அக்கம்பக்கத்தினர் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தனர்.. அதன்படி, அப்துல்லா வீட்டிற்குள் சென்று என்னஏதென்று விசாரித்தனர்.. அதேசமயம், வீட்டின் ஒரு பகுதியில் ரகசியமாக செல்போனில் கேமராவை ஆன் செய்துவைத்தனர்.. குழந்தைக்கு உடம்பு சரியில்லை, அதான் அலறுகிறாள் என்று நஜும்ஷா சாக்கு சொன்னார்.

மீட்பு

மீட்பு

ஆனால் பொதுமக்கள் எல்லாரும் சேர்ந்து குழந்தையை ஓடிச்சென்று துக்கி கொண்டனர்.. டிரஸ்கூட இல்லாமல் இருந்தது அந்த குழந்தை.. ஒரு டிரஸ் எடுத்து குழந்தைக்கு உடையணிவித்து போட்டு, வெளியே தூக்கி வந்தனர்.. அப்போதுதான் நடந்தது என்ன என்று குழந்தையிடம் கேட்டனர்.. அந்த பிஞ்சு சொல்ல சொல்ல, அப்படியே உறைந்து நின்றனர் பொதுமக்கள்.

 ரத்த காயங்கள்

ரத்த காயங்கள்

அந்த 2 பேரும் சாப்பாடு போடுவதே கிடையாதாம்.. அடிக்கடி குழந்தையை இருவருமே மாறி மாறி அடித்துள்ளனர்.. உடம்பெல்லாம் காயங்கள், ரத்தங்கள், புண்கள், வடுக்கள், தழும்புகள் என நிரம்பி கிடக்கின்றன. அந்த குழந்தைக்கு.. ஆளே மெலிந்துபோய் காணப்படுகிறாள்.. பல நாள் பட்டினி போட்டுள்ளனர்.. இதை பார்த்து கண்ணீர் விட்ட மக்கள், உடனடியாக போத்தனூர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

 ஆவேசம்

ஆவேசம்

போலீசார் குழந்தையை மீட்டனர்.. அந்த தம்பதியையும் கைது செய்து ஜீப்பில் ஏற்ற சென்றனர்.. ஆனால், அந்த தெருமக்களே அந்த தம்பதியை அடிக்க ஆவேசத்துடன் பாய்ந்தனர்.. கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.. இப்போது தம்பதி கைதாகி உள்ளனர்.. குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் தூக்கி சென்றனர்.. போலீசாருடன் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து அந்த தம்பதியிடம் விசாரணையை ஆரம்பித்தனர். இவர்கள் சொன்னதை கேட்டு, போலீஸ்காரர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அப்போது சட்டபூர்வமின்றி தத்துகொடுத்த தம்பதிக்கு மற்றொரு பெண்ணுக்கு 7 வயது மகள் இருப்பதும், அந்த சிறுமியையும் வேறு ஒரு பெண்ணுக்கு சட்டவிரோதமாக தத்துகொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியும் மீட்கப்பட்டாள். இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா, அவருடைய மனைவி, மற்றொரு பெண், சட்டவிரோதமாக தத்து எடுக்க உதவிய சிக்கந்தர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

கைது

கைது

மேலும் சிறுமிகளின் பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். குழந்தைகள் பணம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 வயது குழந்தையின் உடலில் பல தழும்புகள் காணப்படுவதால் தாயின் கள்ளக்காதலன் குழந்தையை சித்ரவதை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
English summary
Torture to four year old girl in Coimbatore and two arrested
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X