கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அந்த பக்கம் கரண்ட் கம்பி.. இந்த பக்கம் அம்மா.. தடுமாறி நடந்து வரும் குட்டி.. கண் கலங்குது பார்க்கவே!

தாய் யானையின் நெகிழ்ச்சி வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

கோவை: அப்பதான் பிறந்த பச்சிளம் யானை குட்டி... இன்னொரு பக்கம் கரண்ட் கம்பி.. எழுந்து நிற்கவே முடியாத யானைகுட்டியை.. கரண்ட் கம்பியிலும் படாதவாறு தாய் யானை பத்திரமாக காட்டுக்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று காண்போரை கண்கலங்க வைத்து வருகிறது.

Recommended Video

    பிறந்த குட்டியுடன் கஷ்டப்படும் தாய் யானை

    கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் மாங்கரை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    இப்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி ஏற்படுவதால், சாப்பாடு, தண்ணீர் தேடி ஊருக்குள் யானைகள் வந்துவிடுகின்றன.

    காட்டுப்பகுதி

    காட்டுப்பகுதி

    அப்படி வரும் இரவு நேரங்களில் கிளம்பி கிராமத்துக்குள் வரும் யானைகள் சுற்றித்திரிந்து தேவையான தண்ணீர், உணவு கிடைத்தவுடன் காலையில் காட்டுக்குள் சென்றுவிடுவது வழக்கம். இந்நிலையில் பெண் யானை ஒன்று எல்லையில் குட்டி ஒன்றினை நேற்றிரவு ஈன்றுவிட்டது.. இதனையடுத்து இன்று காலை வனப்பகுதிக்குள் செல்ல முயன்றபோது... பிறந்து சில மணி நேரங்களே ஆன குட்டியால் எழுந்து நடக்க முடியவில்லை.

    மின்வேலி

    மின்வேலி

    அதனால் தாய் யானை அங்கேயே காத்திருந்தது.. பிறகு அந்த குட்டி யானை எழுந்து நின்றது.. அதன்பிறகு அதனை அழைத்து கொண்டு காட்டுக்குள் செல்ல முயன்றது.. ஆனால் காட்டுக்குள் போக முடியாத அளவுக்கு மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. அதனை பார்த்ததும் தாய் யானை குட்டியை எச்சரித்து தூரமாக நிறுத்தி கொண்டது.

    கரண்டு கம்பம்

    கரண்டு கம்பம்

    பிறகு வேறு வழி இருக்கிறதா என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்கிறது.. மின் வேலியில் படாதவாறு குட்டியை அழைத்துக்கொண்டு பெண்யானை செல்லும் காட்சியை அங்கிருந்த நபர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.. இதனை சோஷியல் மீடியாவிலும் இப்போது பதிவிட, அது வேகமாக இன்று நடந்த இந்த சம்பவம் விலங்கு நல ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. வைரலாகி வருகிறது. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. இன்றுதான் உலக வன உயிரின பாதுகாப்பு தினம்.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    யானைகள் வலசை பாதையில் தொடர் ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தி வருவதால் அதன் வலசை பாதைகள் மாறி யானைகள் கிராமப்பகுதிக்குள் புகுவது அதிகரித்து விடுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தாய் யானை குட்டி யானையை பத்திரமாக அழைத்து செல்லும் இந்த வீடியோ கண்கலங்க வைத்து வருகிறது. இந்த வீடியோவில்வில் ஒருவர் "மெதுவா போ.. மெதுவா போ" என்று யானையை பார்த்து சொல்லுவதை மேலும் உருக்கத்தை தந்து வருகிறது.

    English summary
    The baby elephant is safely carried by the mother elephant near coimbatore and this touching video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X