கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்

சாக்கடை அடைப்பை சரி செய்த இரு காவலர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவை.. சாக்கடை அடைப்பை சரி செய்த இரு காவலர்கள்-வீடியோ

    கோவை: புலன்விசாரணை படத்துல வரும் விஜயகாந்த் மாதிரி பெரிய ரெயின் கோட் போட்டுக்கிட்டு இறங்கி வேலை பார்த்த அந்த நபரைதான் கோவை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

    கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

     'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி! 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி!

    லங்கா கார்னர்

    லங்கா கார்னர்

    வெளுத்து கொட்டிய மழையால் கோவை ரயில் நிலையம் பகுதியில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மழை நீரும் சாக்கடையுடன் கலந்துவிட்டது. அதனால் லங்கா கார்னர் பாலத்தின் கீழ் நிறைந்து வழிந்தது. இந்த சாக்கடை தண்ணியால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். சாக்கடையில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாற்றம்

    நாற்றம்

    அப்போதுதான் அவர் வந்தார். பெயர் ஜான் கென்னடி. போக்குவரத்து உதவி ஆய்வாளராக உள்ளார். மழை பெய்கிறது என்றோ, சாக்கடை நாற்றம் அடிக்கிறது என்றோ அவர் நினைக்கவில்லை. நம் வேலை இது கிடையாதே என்ற நினைப்பும் அவருக்கு வரவில்லை. ஒரு நீளமான குச்சியை எடுத்துக் கொண்டு, சாக்கடை பகுதியில் இறங்கினார்.

    செருப்பு

    செருப்பு

    சாக்கடைக்கு அந்த பக்கம் ஒரு கால், இந்த பக்கம் ஒரு கால்வைத்து நின்று கொண்டு, குச்சியால் சாக்கடை அடைப்பை சரி செய்தார். அப்போது, மற்றொரு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாண்டியும் அங்கு வந்துவிட்டார். செருப்பு போட்டுக்கிட்டு சாக்கடை பக்கம் வரமுடியவில்லை போலும். அதனால் கையிலேயே செருப்பை எடுத்துக் கொண்டு வந்து அவரும் அடைப்பு பணியை சீர் செய்தார்.

    பாராட்டு

    பாராட்டு

    இதனால் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, நிலைமை சீரானது. டிராபிக் சிக்னலில் உள்ள எல்லாருமே இதனை பார்த்தார்கள். இருவரின் செயல்களை கவனித்த மக்கள் சாக்கடையை சீர் செய்த இந்த இரு நல்ல உள்ளங்களை பாராட்டி வருகிறார்கள்.

    English summary
    Two Traffic Police men were trying to repair water way near Coimbatore Railway Station. This video goes viral now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X