கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவையில் பஸ் ஸ்டிரைக்.. 2வது நாளாக 60 சதவீத பஸ்கள் இயங்கவில்லை.. காத்திருந்து தவிக்கும் மக்கள்!

Google Oneindia Tamil News

கோவை: போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

Transport workers strike in Coimbatore, On the 2nd day, 60 percent of buses not running

அதன்படி கோவையில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எல் பி எஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் 1200 பேருந்துகள் கோவை கோட்டத்தில் 3000 நகரப் பேருந்துகள் மற்றும் 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன 60% பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Transport workers strike in Coimbatore, On the 2nd day, 60 percent of buses not running

சில பேருந்துகளை ஏபிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இயக்கினர் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

இதன் காரணமாக கோவை உக்கடம் காந்திபுரம் சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மண்டலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Transport workers strike in Coimbatore, On the 2nd day, 60 percent of the buses were not running, The public going to work suffered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X