கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகனை காக்க கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது.. உதயநிதி உருக்கம்

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் தள்ளுவண்டி கடை நடத்திய தன்னை தரக்குறைவாக பேசியதால் தட்டி கேட்ட மகனை அடித்து ஜீப்பில் ஏற்றும் போலீஸாரிடம் இருந்து மகனை காக்க கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது என உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

    ஆவேசமான சிறுவன்.. எஸ்ஐ சட்டையை பிடித்ததால் பரபரப்பு.. கோவையில்!

    கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி உணவு கடை நடத்தி வருபவர் வேல்மயில். இவர் கடந்த 17-ஆம் தேதி தனது மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளார்.

    11 வயது சிறுமி.. 3 சிறுவர்கள் சேர்ந்து.. பலான படம் பார்த்து கொண்டே நாசம் செய்த அக்கிரமம்.. கோவை ஷாக்11 வயது சிறுமி.. 3 சிறுவர்கள் சேர்ந்து.. பலான படம் பார்த்து கொண்டே நாசம் செய்த அக்கிரமம்.. கோவை ஷாக்

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி உடனடியாக கடையை மூடும்படி கூறியுள்ளார். அப்போது வேல்மயிலும் அவரது மனைவியும் வாக்குவாதம் செய்தனர்.

    பள்ளி மாணவன்

    பள்ளி மாணவன்

    இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் வேல்மயிலின் செல்போனை பறித்துக் கொண்டு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசினர். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவனுக்கு தாய், தந்தையை கேவலமாக பேசியதால் ஆத்திரம் வந்தது. உடனே போலீஸாரின் வாகனத்தின் சாவியை பறித்தான். அப்போது அந்த சிறுவனை போலீஸார் லத்தியால் கடுமையாக தாக்கினர்.

    பாடம்

    பாடம்

    இதையடுத்து மகனை விடுமாறு அந்த தாய் கெஞ்சும் வீடியோ காட்சிகள் வைரலாகின்றன. இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஊரடங்கிலும் கோர்ட் சென்று திறந்த டாஸ்மாக்கில் குவியும் கூட்டத்தை கண்டும் காணாமல் இருக்கும் போலீஸ், தள்ளுவண்டி, செல்போன் கடை நடத்தும் எளிய மனிதர்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவது எவ்வகையில் நியாயம்? காவல்துறையை கவனிக்கும் @CMOTamilNadu-க்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவர்!

    ஊரடங்கு

    தள்ளுவண்டி கடை நடத்தும் தன் தாயை ஊரடங்கை காரணம் காட்டி தரக்குறைவாக பேசும் போலீஸ் எஸ்.ஐ-யை மகன் தட்டி கேட்கிறான். அதற்கு அவனை அடித்து ஜீப்பில் ஏற்றுகின்றனர். அப்போது போலீசின் கோரப்பிடியிலிருந்து தன் மகனை காக்கக் கண்ணீருடன் கதறும் இந்த ஏழைத் தாயின் போராட்டம் நம்மைப் பதற வைக்கிறது என தெரிவித்துள்ளார்.

    English summary
    Udhayanidhi Stalin condemns about the incident happened in Coimbatore for a tricycle hotel shop.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X