கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரேஷன் கடைகளில் ஏராளமான காலி பணியிடங்கள்.. அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட்ட சூப்பர் தகவல்

Google Oneindia Tamil News

கோவை : நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் கூட்டுறவு துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரொனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது

சிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!சிஏஏ, விவசாயிகள் போராட்டம், லவ் ஜிகாத்.. கூப்பிட்டு விசாரித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்!

காலிபணியிடங்கள்

காலிபணியிடங்கள்

விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு 9500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில் இந்த ஆண்டு 11500 கோடி பயிர் கடனை வழங்க முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.. சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையினை பார்வையிட்டேன். நியாய விலை கடைகளில் தமிழகம் முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது . எனவே நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

எண்ணிக்கை உயர்வு

எண்ணிக்கை உயர்வு

விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும் . கூட்டுறவுத்துறை முதல்வர் ஸ்டாலின் இடும் ஆணையை மக்களிடம் கொண்டு செல்லும் . கூட்டுறவு துறையின் மூலமாக செயல்படும் சுய உதவிகுழுக்களின் எண்ணிக்கையினை 55 ஆயிரத்தில் இருத்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . படித்த இளைஞர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் எந்த தவறுக்கும் இடமளிக்காமல் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

உடனே நடவடிக்கை

உடனே நடவடிக்கை

குடும்ப அட்டை இல்லாமல் இருந்தவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை கிடைக்க உணவு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 4451 விவசாய கடன் சங்கங்களில் நடைபெற்றுள்ள விதி மீறல்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது . வரும் 31 ம் தேதி அந்த ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அதில் உள்ளவை குறித்து தெரிவிக்கப்படும்.

ஐ பெரியசாமி தகவல்

ஐ பெரியசாமி தகவல்

வேப்பபுண்ணாக்கு தயாரிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிது. நீண்டகாலமாக ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள பணியாளர்களை மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கூட்டுறவு தேர்தல் முறைப்படி நடக்கும்" இவ்வாறு அமைச்சர் ஐ பெரியசாமி கூறினார் .

English summary
tamilnadu Cooperatives Minister i Periyasamy said on wednesday that vacancies in ration shops will be filled soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X