கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை எடுத்து சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது!

Google Oneindia Tamil News

கோவை: ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தவர்களின் உடல்களை கோவை மாவட்டம் சூலூருக்கு கொண்டு செல்லும் அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. இதையடுத்து வேறொரு அமரர் ஊர்தியில் உடல் கொண்டு செல்லப்பட்டது. அது போல் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வாகனமும் விபத்தில் சிக்கி 6 பேர் காயமடைந்தனர்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணைகல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்திலிருந்து வருண் சிங் என்பவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.

உடல்கள் அடையாளம்

உடல்கள் அடையாளம்

13 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களது உடல்கள் வெலிங்டன் பயிற்சி மையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ்டாலின், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வெலிங்டன்

வெலிங்டன்

இதையடுத்து டெல்லியில் நாளை இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் நிலையில் வெலிங்கடனில் இருந்து அந்த 13 உடல்களும் சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது நீலகிரி மாவட்டம் பர்லியார் மலைப்பகுதியின் திருப்பத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 6 பேர் காயமடைந்தனர்.

அமரர் ஊர்தி

அமரர் ஊர்தி

பின்னர் உடல்களை எடுத்து சென்ற அமரர் ஊர்தி மேட்டுப்பாளையம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் பிடித்ததால் உடல் எடுத்து சென்ற அமரர் ஊர்தி அந்த வாகனத்தில் மோதியது. இதையடுத்து உடனடியாக வேறு ஒரு அமரர் ஊர்தி வரவைக்கப்பட்டு உடல் பாதுகாப்பாக சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Recommended Video

    Bipin Rawat உயிரிழப்பு! Chopper Crashல் 13 பேர் பலி | OneIndia Tamil
    மக்கள் அஞ்சலி

    மக்கள் அஞ்சலி

    இந்த உடல்களை கொண்டு செல்லும் வழிநெடுகிலும் மக்கள் பூக்களை தூவி வருகிறார்கள். வீரவணக்கம் செலுத்தியும் மலர்களை தூவியும், கைகளை கூப்பியும் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    English summary
    Van which carries bodies of Army officials et with an accident near Mettupalayam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X