கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீங்க.. குற்றவாளிகளை எழுதுங்க.. வானதி சீனிவாசன் கோரிக்கை

பெண் போலீஸ் அதிகாரி பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க வேண்டும் என வானதி கோரியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீங்க - சீனிவாசன் கோரிக்கை

    கோவை: பெண் காவல்துறை அதிகாரிகளை வைத்து பொள்ளாச்சி வழக்கை நடத்த வேண்டும் என்று பாஜக சார்பாக வானதி ஸ்ரீநிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குற்றவாளிகளை பற்றி எழுதுங்கள்.. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீர்கள் என்று ஊடகங்களுக்கும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

    பரபரப்பாகி வரும் பொள்ளாச்சி சம்பவத்தில் சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து பேசக்கூடிய கட்சி பாஜகவும்தான். அதனால் சரமாரியான வசைபாடுகளுக்கு அக்கட்சி உள்ளாகி உள்ளது.

    எனினும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க கோரி, கோவை மாவட்ட கண்காணிப்பாளரிடம் சில கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார் பாஜக மகளிர் அணி சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.

    Also Read | பொள்ளாச்சி பயங்கரம்.. சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் மக்கள்

    புகைப்படங்கள்

    புகைப்படங்கள்

    இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி ஸ்ரீனிவாசன் சொன்னதாவது: "சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எந்தவிதமான பின்னணியில் இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்கள் மீதான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும். வழக்கமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்தவிதமான ஊடக செய்திகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

    பெண் அதிகாரி

    பெண் அதிகாரி

    பெண் காவல்துறை அதிகாரிகளை வைத்து இந்த விசாரணையை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் இ-மெயில் வாட்ஸ்அப், போன்றவற்றில் பகிர்கின்ற வகையிலேயே அந்த செய்திகளை ரகசியமாக வைத்து விசாரணை நடத்தக்கூடிய அளவில் சிறப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    மகிளா நீதிமன்றங்கள்

    மகிளா நீதிமன்றங்கள்

    இதுபோன்ற விசாரணைகளின்போது, மகிளா நீதிமன்றங்கள் இருந்தாலும்கூட பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கம் இல்லாமல், எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம்தான் கோரிக்கையாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாஜக மகளிர் அணி சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

    ரகசியம் காப்பாற்றுங்கள்

    ரகசியம் காப்பாற்றுங்கள்


    ஊடகங்களான உங்களிடம் கூட எங்களுக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது. செய்திகளுக்கு பரபரப்பு முக்கியம்தான். அதே சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையில் இருந்து இதை அணுக வேண்டும். அந்த பெண்களின் வருங்கால வாழ்க்கையையும் மனதில் வையுங்கள். குற்றவாளிகளை பற்றி எழுதுங்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி எழுதாதீர்கள். அந்த ரகசியம் காப்பாற்றுகள்" என்றார்.

    இத்தனை பேசிய வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட எஸ்பி வெளியிட்டதாக கூறப்படுவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    English summary
    TN BJP General Secretary Vanathi Srinivasan has adviced to media about Pollachi issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X