கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா?.. ராமதாஸுக்கு வேல்முருகன் சுளீர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்!- வீடியோ

    கோவை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எனக்கு வழங்கப்பட்ட உணவு மீது சந்தேகம் உள்ளது என வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

    கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் கிளப் ஓட்டலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் 6 வயது சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும்.

    வன்னியர் சங்க அறக்கட்டளை தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, முழுக்க முழுக்க ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். 2 கோடி வன்னிய மக்களுக்காக கல்வி, கோவில் கட்டுவதாக கூறி, நிதி வசூல் செய்தார். வன்னியர் சங்க அறக்கட்டளை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள் தொடர்பாக ராமதாஸ் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

     காங்கிரஸின் பிரமிக்க வைக்கும் வாக்குறுதிகள்.. மக்களைக் கவரவா.. இல்லை பாஜகவைக் கவிழ்க்கவா? காங்கிரஸின் பிரமிக்க வைக்கும் வாக்குறுதிகள்.. மக்களைக் கவரவா.. இல்லை பாஜகவைக் கவிழ்க்கவா?

    விவாதிக்க தயாரா

    விவாதிக்க தயாரா

    3 லட்சம் கோடி மதிப்புள்ள செங்கவராயன் அறக்கட்டளை சொத்துகள்,
    வரலாற்றை மறைத்து ராமதாஸ் பேசி வருகிறார். தைலாபுரம் தோட்டம் ராமதாஸுக்கு மாமியார் வீட்டில் இருந்து கொடுத்த பரிசு. வன்னியர் சங்க சொத்துகள் தொடர்பாக வேல்முருகனுடன் விவாதிக்க ராமதாஸ் தயாரா.

    போராடுவது

    போராடுவது

    30 தொகுதிகளில் திமுக, கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்துள்ளோம். ஆனால் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கவில்லை. நோட்டோ, சீட்டோ எனக்கு தேவையில்லை. 25 கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக தலைவரிடம் வலியுறுத்தியுள்ளேன். மக்களுக்காகவும், மண்ணுக்காகவும், மொழிக்காகவும் போராடுவதே என் நோக்கம்.

    எந்த அரசியல் கட்சி

    எந்த அரசியல் கட்சி

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை மன்னித்து விடுதலை செய்வோம் என ராகுல்காந்தி அறிவிப்பார். தமிழகத்தை எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து விட்டார். துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் வீட்டில் நடத்தாதது ஏன்?. எந்த அரசியல் கட்சி தலைவரிடமும் கை நீட்டி கவர் வங்காத அரசியல்வாதி நான்.

    சந்தேகம்

    சந்தேகம்

    சிறை உணவால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு அளிக்கப்பட்ட சிறை உணவு, சிகிச்சையில் மர்மம் இருக்கிறது என சந்தேகமாக உள்ளது. 40 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு எனக்கு அனுமதி வழங்கவில்லை என்றார் வேல்முருகன்.

    English summary
    Tamilaga Vazhvurimai party president Velmurugan challenges Ramadoss that he is ready to debate with him about Vanniyar Sangam assets?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X