கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு!

4 டயர்களுடன் அரசு பேருந்து சென்ற வீடியோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    திருப்பூர் சாலையில் 4 டயர்களுடன் சென்ற அரசு பேருந்து-வீடியோ

    கோவை: குதிச்சு குதிச்சு ரோட்டில் போன அரசு பஸ்ஸை எல்லாரும் வியப்புடன் பார்த்து கொண்டே போனார்கள்.. ஏன்னா.. அந்த பஸ் பின்பக்கத்தின் 2 டயரில் மட்டுமே போய் கொண்டிருந்ததுதான்.
    பொதுவா ஒரு பஸ்ஸூக்கு 6 டயர்கள் இருக்கும். அதுவும் பின்பக்கம் 4 டயர்கள் இருக்கும். இப்படித்தான் நாம பார்த்திருக்கோம்.

    ஆனால் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சுக்குள் பயணிகளும் உட்கார்ந்திருக்கிறார்கள். பஸ் வர்ற ஸ்டைலை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.

    Viral Video about TN Gov Bus operated with 4 tires near Tiruppur

    அதனால் சாலையில் செல்வோர் உற்று உற்று பார்த்தபோதுதான் தெரிந்தது, பின்புறத்தில் 4 டயர்களுக்கு பதிலாக 2 டயர்களில் மட்டுமே பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

    இதனை அந்த பஸ்ஸின் பின்னால் காரில் சென்ற இருவர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டுள்ளனர். இதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர். அரசு பஸ், இப்படி பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்டது மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    "கவர்ன்மென்ட் 4 சக்கரத்துக்கு பதிலாக 2 சக்கரத்தை வைத்து எப்படி மிச்சம் பண்ணுகிறது பாருங்கள்" என்ற குரலும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது.

    போக்குவரத்துக் கழகம் விளக்கம்

    இந்த நிலையில் இந்த பேருந்து குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் இந்த செய்தியில் உண்மை இல்லை. இந்த பேருந்தில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை. பொள்ளாச்சியிலிரு்நது மேட்டுப்பாளையத்தில் உள்ள டிப்போவுக்கு அனுப்பப்பட்ட பேருந்து இது என்று விளக்கம் அளித்துள்ளது.

    English summary
    Viral Video about gov bus running on the Tiruppur - Pollachi Road with only 4 tires
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X