கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் அம்மாவை திட்டுவீங்களா".. ஆவேசமான சிறுவன்.. எஸ்ஐ சட்டையை பிடித்ததால் பரபரப்பு.. கோவையில்!

போலீஸ்காரரின் சட்டையை சிறுவன் பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

கோவை: பெற்ற தாயை அந்த சப்-இன்ஸ்பெக்டர் அசிங்கமாக பேசிவிட்டார்.. அதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், சப் இன்ஸ்பெக்டரின் பைக் சாவியை ஆவேசமாக புடுங்கி எடுத்துவிடவும், எஸ்ஐ தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.. இதனால் சிறுவனிடம் எஸ்ஐ கோபத்தை காட்ட.. சிறுவனோ, அந்த போலீஸ்காரரின் சட்டையை பிடித்துவிட்டான்.. இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    ஆவேசமான சிறுவன்.. எஸ்ஐ சட்டையை பிடித்ததால் பரபரப்பு.. கோவையில்!

    ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டியில் சாப்பாடு கடை நடத்தி வருபவர் வேலுமயில்.. இவருக்கு கடையில் அவரது மனைவி ஒத்தாசையாக இருந்து வருகிறார். தற்போது ஸ்கூல் லீவு என்பதால் இவரது மகனும் தள்ளுவண்டி வியாபாரத்துக்கு உதவி வருகிறார்.

     viral video: coimbatore sub inspector assaults minor boy

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு டிபன் கடையில் நின்று நிறைய பேர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.. அந்த பக்கம் ரோந்து வந்த உதவி ஆய்வாளர் செல்லமணி, "இவ்வளவு கூட்டம் இருந்தால் எப்படி? சமூக விலகல் எங்கே? 9 மணிக்குதான் கடை திறக்க அனுமதி, மணி இப்பதான் 8 ஆகுது.. கடையை மூடுங்க.. கும்பலா நின்னு சாப்பிட்டுட்டு இருந்தால் தொற்று பரவாதா? வயிற்று பொழப்பைவிட உயிர்தான் முக்கியம்" என்றார்,

    உடனே வேலுமயில் மனைவியோ, "உயிர் வாழறதுக்கே சாப்பாடுதானே முக்கியம்" என்றார்.. இப்படியே வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதை வேலுமயில் மகன் அந்த தகராறை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.. இதை கவனித்த சப்-இன்ஸ்பெக்டர் அந்த சிறுவனை அழைத்து "வீடியோ ஏன் எடுக்கிறே? டெலிட் செய்" என்றார்.. சிறுவனும் "டெலிட் செய்துவிட்டேன்" என்று சொல்லவும், சந்தேகமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்போனை வாங்கி பார்த்தார்.

    அதில் சிறுவனின் தாயை திட்டியது பதிவாகி இருந்தது.. உடனே சப்-இன்ஸ்பெக்டர், "இந்த செல்போனை ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கோ" என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்ல பைக்கை எடுத்தார்.. உடனே அந்த சிறுவன் கோபப்பட்டு, பைக் சாவியை டக்கென பிடுங்கிவிட்டான்.. இதனால் போலீஸ்காரர் பைக்குடன் சரிந்து கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

    பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டியவரை.. வீடு புகுந்து.. செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?பரபரப்பு.. ஊழலை சுட்டி காட்டியவரை.. வீடு புகுந்து.. செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தாரா திமுக எம்எல்ஏ?

    கோபடைந்த அவர், சிறுவனிடம் இருந்து சாவியை வாங்க முயன்றார்.. ஆனால் சிறுவன் ஆவேசமாகி சப்-இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்துவிட்டான்.. இதனால் போலீசார் சிறுவனை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல சப்-இன்ஸ்பெக்டர் முயன்றார்.. அதற்கு சிறுவனின் பெற்றோர் விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பிறகு ரோந்து வண்டி வரவழைக்கப்பட்டு சிறுவனை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரித்தனர்.. அவனை பற்றி விசாரிக்கும்போதுதான், நல்ல பையன், நன்றாக படிக்க கூடியவன் என்று தெரியவந்தது.. பிறகு எச்சரித்து, எழுதி வாங்கி கொண்டு, அறிவுறுத்தியும் அனுப்பி வைத்தனர்.. தன் பெற்றோர் மீதுள்ள பாசத்தினாலேயே இப்படி நடந்து கொண்டதாக பிறகு தெரிந்தது.. எனினும் அந்த தள்ளுவண்டி கடை இருந்த இடமே ஒரே களேபரமாகிவிட்டது!!

    English summary
    viral video: coimbatore sub inspector assaults minor boy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X