கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை இருக்காது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Google Oneindia Tamil News

கோவை: மழை பெய்ய ஆரம்பித்ததும் தண்ணீர் பிரச்சனை காணாமல் போகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Water will not be a problem once it starts raining Says Minister SP Velumani

இதனால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து விவசாய நிலங்களில் இருந்து கிணறுகள் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

அடடா மழைடா அடடா மழைடா "அடை" மழைடா.. 6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் பரவலாக மழை

இந்தநிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மோட்டார் பழுது போன்ற காரணங்களால் சில இடங்களில் தண்ணீர் வராமல் இருக்கிறது, பிரச்சனை உள்ள இடங்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வேலையை உள்ளாட்சித் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சென்னை ஒரு நாளுக்கு 800 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது 525 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. தண்ணீர் தேவை அதிகம் இருக்கும் பட்சத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறினார்.

அதே சமயம், விமர்சனங்கள் கூட, எங்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்த்துகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஆறு மாதங்களுக்கு பிறகு, சென்னை போரூர், வேளச்சேரி , செம்மஞ்சேரி, பள்ளிக்கரனை,கேளம்பாக்கம் , மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் வெப்பம் தணியும்; வட சென்னை பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், பாண்டிச்சேரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உளளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

English summary
Minister SP Velumani said that Water will not be a problem once it starts raining
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X