கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கனமழையால் பலர் உயிரிழப்பு.. கேரள முதல்வர் இரங்கல்.. மீட்பு பணிக்கு உதவ தயாரென அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவையில் கொட்டித் தீர்த்த மழை.. வீடுகள் இடிந்து விழுந்து 17 பேர் பலி

    கோவை: மேட்டுப்பாளையம் அருகே இன்று அதிகாலை கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் சிறுமிகள், பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் கனமழையால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை மேட்டுப்பாளையம் பகுதியில் மழை பெய்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் கனமழையால் பாறைகள் திடீரென உருண்டு விழுந்தது.

    We saddened by the loss of life, livelihoods and property due to heavy rains in Tamil Nadu: says Pinarayi Vijayan

    இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்து 4 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதில் வீடுகளில் இருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் . இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

    இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழையால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மழையால் மக்கள் உயிரிழந்திருப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அந்த நிலை இனி ஒரு காலமும் உருவாகிடக் கூடாது... அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கைஅந்த நிலை இனி ஒரு காலமும் உருவாகிடக் கூடாது... அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், "தமிழ்நாட்டில் பெய்த கனமழையால் உயிர், வாழ்வாதாரம், உடைமைகளை மக்கள் இழந்ததை நினைத்து வருத்தப்படுகிறோம். துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ நாங்கள் (கேரள மக்கள்) தயாராக இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    kerala CM Pinarayi Vijayan on twitter: We are saddened by the loss of life, livelihoods and property due to heavy rains in Tamil Nadu. My deepest condolences to the bereaved families. We express our solidarity to the affected and stand ready to support them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X