கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்ன புதுப்பழக்கம்.. கோவை கலெக்டருடன் வாக்குவாதம் செய்த அதிமுக எம்எல்ஏக்கள்!

Google Oneindia Tamil News

கோவை: இது என்ன புதுப்பழக்கம்.. எழுந்து நின்று மனுவை பெற்றுக் கொள்ளுங்கள் என கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பி வாக்குவாதம் செய்ததால், மாவட்ட ஆடசியர் சமீரன் எழுந்து நின்று மனுக்களை பெற்றார். இதனால் அப்போது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், மற்றும் மத்திய மாநில அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டபனிகளை ரத்துசெய்யகூடாது, தொகுதிகளில் நடைபெறும் அரசு பணிதுவக்க நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரை, அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்வி வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் சமீரன் நாற்காலியில் அமர்ந்து கொண்டே மனுவை பெற்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தால் எழுந்து நின்று மனுக்களை வாங்குங்கள். இது என்ன புது பழக்கம் என வாக்குவாதம் செய்தனர்.

ஆட்சியர் மனு வாங்கினார்

ஆட்சியர் மனு வாங்கினார்

குறிப்பாக பொள்ளாட்சி எம்எல்ஏ ஜெயராமன், மேட்டுப்பாளையம் எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் ஆட்சியர் சமீரன் எழுந்து நின்று மனுக்களை பெற்றார்.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி, கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்தோம்.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

மேலும் கோவை மாவட்டத்தில் போடப்படும் தடுப்பூசிகளுக்கு அதிகாரிகளின் மூலமாகவே டோக்கன்களை வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தோம். கோவையில் பல்வேறு நேரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கோவை புறக்கணிப்பு

கோவை புறக்கணிப்பு

ஆளும் கட்சியினர் சிலர் எவ்வித உதவியும் இல்லாமல் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் , முந்தைய அரசால் கோவையில் போடப்பட்ட ஒப்பந்த பணிகள் இந்த அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை மீண்டும் துவக்க வேண்டும் . கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டு விட்டதோ என்ற ஐயம் கோவை மக்கள் மத்தியிலும் எங்களிடமும் உள்ளது" என்றார்.

English summary
AIADMK MLAs who submitted a petition to Coimbatore Collector G S Sameeran expressed displeasure as the Collector remained initially seated while receiving the petition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X