கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"டோன்ட் டச்".. டிடிஎப் வாசனை திடீரென மறித்த போலீஸ்.. வாட்.. நீங்களா? செக் போஸ்ட்டில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: நேற்று போலீசார் மூலம் கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் உடனே பெயிலில் ரிலீஸ் செய்யப்பட்டார். இவரின் கைதுக்கு முன் என்ன நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

என்னை மன்னிச்சிடுங்கள் மக்களே.. நான் இனி ரொம்ப ஸ்பீடா ஓட்ட மாட்டேன்.. நமக்கு எதுக்கு பிரச்சனை என்று ஒரு நாள் அம்பியாக பேசுவது.. மறுநாளே "என் பவர் தெரியாமா விளையாடுறீங்க" என்று அந்நியனாக மாறி கோபமாக வீடியோ வெளியிடுவது.. என்று மல்டிபிள் பர்சனாலிட்டியுடன் வலம் வரும் பைக் ரேசர்தான் டிடிஎப் வாசன்.

பல 2கே கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்.. தளபதி.. தல.. உலக நாயகன் எல்லாமே டிடிஎப் வாசன்தான். TTF வாசன் என்பவர் Twin Throttlers என்று யூ டியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 வருடமாக இந்த டிராவல் விலாக் பக்கத்தை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 27.6 லட்சம் சப்ஸ்கிரைப்பர்கள் யூ டியூபில் இருக்கிறார்கள்.

வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம் வேகமா போனது தப்புத்தான்.. இனி அப்படி செய்ய மாட்டேன்.. கைதுக்கு பின் டிடிஎப் வாசன் மனமாற்றம்

பைக் ரேஸர்

பைக் ரேஸர்

பைக்கில் பயணம் செய்வதை வீடியோவாக போடுவதுதான் இவரின் வழக்கம். சரி இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இவர் பைக் ஓட்டும் வேகம்தான் பிரச்சனையே. 240 கிமீ வேகத்திற்கும் அதிகமாக பைக் ஓட்டுவது, ஹெல்மெட் போடாமல் ஓட்டுவது, சாலையில் கூட்டம் சேர்த்து நியூசன்ஸ் செய்வது, சாலையில் அபாயகரமான ஸ்டண்ட் செய்வது போன்ற அத்துமீறல்களை இவர் செய்து வருகிறார். சமீபத்தில் லடாக் சென்றதை இவர் வீடியோவாக போட்டு இருந்தார். பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ் செய்வது ஆகியவற்றை இவர் வீடியோவாக போட்டு வருகிறார்.

குற்றம் என்ன?

குற்றம் என்ன?

இவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.. இவர் சாலையில் விதிகளை மீறி செல்கிறார். அதோடு 2கே கிட்ஸ்களை தவறாக வழி நடத்துகிறார். பல முறை புகார் அளித்தும் தன்னை திருத்திக்கொள்வது இல்லை என்று கூறப்படுகிறது. சமயங்களில் இவர் கைதுக்கு பயந்து.. மக்களே என்னை சிலர் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என் வளர்ச்சி பிடிக்காமல் சிலர் பேசுகிறார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று 9 மணி சீரியலில் வரும் கதையாகி போல கண்ணில் தண்ணீர் வைத்து வாசன் பேசுவார்.

கோபம்

கோபம்

சில சமயங்களில் கோபம் அதிகமாகி.. நான் என்ன தவறு செய்தேன்.. எனது பவர் தெரியாமல் பேசிகிட்டு இருக்கீங்க. என் கிட்ட நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க நினைக்கிறன்.. ஆனா, கேட்க மாட்டேன். அது என்னோட வேலை கிடையாது. சுமூகமா போயிடலாம்னுதான் நான் இருக்கேன். பார்த்துக்கோங்க என்று வில்லன் ஸ்டைலில் கோபமாக பேசி இருந்தார். வாசனின் இந்த திடீர் கோபத்திற்கு. சமீபத்தில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்தான் காரணம்.

வழக்கு

வழக்கு

மொத்தம் இரண்டு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. சமீபத்தில் யூ டியூப் பிரபலம் ஜிபி முத்துவுடன் இவர் பைக்கில் வேகமாக சென்றார். 140 கிமீ வேகத்தை தாண்டி பைக் ஓட்டினார். அதோடு இல்லாமல் ஜிபி முத்து இதில் ஹெல்மெட் அணியவில்லை. மேலும் வாசன் இதில் இடை இடையே கையை விட்டும் ஊட்டினார். இதை பார்த்த சிலர் வாசன் மீது போலீசில் புகார் வைத்தனர். போத்தனூர் காவல்நிலையம், சூலூர் காவல்நிலையம் ஆகிய இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.

ஜாமீன்

ஜாமீன்

இதில் போத்தனூர் போலீசார் வழக்கில் அவரை கைது செய்ய போலீஸ் முயன்றது. ஆனால் அதற்கு முன் அவர் ஜாமீன் பெற்றார். மதுரைக்கரை நீதிமன்றத்தில் சரண் அடைந்த வாசன், காலையில் இருந்து மாலை வரை கூண்டில் அமர வைக்கப்பட்டார். இதற்கு அவர் கேஜிஎப் ராக்கி பாய் ஸ்டைலில் சிவப்பு கோட் அணிந்து வந்தது வேறு கதை! அதன்பின் 2 பேர் அளித்த உத்திரவாதத்தின் பெயரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் சூலூர் போலீசார் வழக்கில் வாசன் ஜாமீன் பெறவில்லை. இதையடுத்து அவரை கைது செய்யும் திட்டத்தில் போலீஸ் இருந்தது.

ஆஜர்

ஆஜர்

இது தொடர்பாக போலீசில் ஆஜராகி அவர் விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் நேற்று கோவை - பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த செக் போஸ்டில் போலீசார் சோதனை செய்து வந்தனர். அப்போது திடீரென வாசன் அங்கே வந்த நிலையில்.. போலீசார் அவரை பிடித்து.. நீங்களா? ஏன் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை என்று விசாரித்தனர். அவர் பெங்களூர் செல்வதாக போலீசில் தெரிவித்து உள்ளார். சாதாரண சோதனையில், வாசன் தானாக வந்து சிக்கி இருக்கிறார்.

ஜாமீன்

ஜாமீன்

அவர் பெங்களூர் செல்லும் திட்டத்தில் இருந்திருக்கிறார். ஜாமீனில் வந்துவிட்டு அவர் ஊர் சுற்றுவதாக கூறியது போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து அவரை உடனே போலீசார் கைது செய்து சூலூர் காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஏற்கனவே நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இதனால் அதே பிரிவுகளில் மீண்டும் நடவடிக்கை எடுப்பது சிக்கல் என்பதால் போலீசார், அவருக்கு ஜாமீன் கொடுத்து உடனே விடுதலை செய்தனர். வேகமாக பைக் ஓட்ட கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்.

ஆனால் இவரின் ரசிகர்களோ எங்கள் தலையை டச் பண்ணாதீங்க.. அவர் பவர் உங்களுக்கு தெரியாது என்று செய்திகளுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர்!

English summary
What happened yesterday between Police and TTF Vasan in Coimbatore?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X