கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனா பலி பின்னணி என்ன? அமைச்சர் விஜய பாஸ்கர் சொல்லும் காரணம் இதுதான்

Google Oneindia Tamil News

கோவை: தமிழகத்தில் கொரோனா சார்ந்த இறப்பு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா மரணம் உயர யார் காரணம்? அமைச்சர் விஜயபாஸ்கர் பகீர் விளக்கம்!

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதனையடுத்து செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதிக பரிசோதனைகள் எடுக்கப்படுவது சென்னையை தொடர்ந்து கோவையில்தான். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்புதமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா.. சென்னையில் 1,130 பேர் கொரோனாவால் பாதிப்பு

    அச்சப்பட வேண்டாம்

    அச்சப்பட வேண்டாம்

    மேலும் பல நோய்களின் தாக்கத்தால்தான் கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறகையில், கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

    வல்லரசு நாடுகள்

    வல்லரசு நாடுகள்

    வல்லரசு நாடுகள் கூட திணறுகின்றன. இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகள் நிலைமை என்ன என்று பார்க்கிறீர்கள். 15 முதல் 16 சதவீதம் இறப்பு விகிதம் மேலை நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளது. மக்களிடம் பதட்டத்தை எப்படி குறைப்பது, எவ்வாறு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் அரசு ரொம்பவே கவனம் செலுத்துகிறது.

    இணை நோய்கள்

    இணை நோய்கள்

    இதர நோய்கள், இணை நோய்கள் இருப்பவர்களுக்குத்தான், கொரோனா காரணமாக உயிரிழப்பு ஏற்படுகிறதே தவிர, கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு கிடையாது. எண்ணிக்கையை பார்த்து மக்கள் பயப்பட வேண்டாம். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை மக்கள் கடைபிடித்தால் போதும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    கோவை நிலவரம்

    கோவை நிலவரம்

    கோவையில் அரசு மருத்துவமனைகள் தான் தனியார் மருத்துவமனைகளை விடவும் சிறப்பாக சிகிச்சை அளித்து வருவதாக பேட்டியின் போது உடனிருந்த அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

    English summary
    Tamil Nadu Health Minister vijayabaskar reveals that which is the reason for corona related death in Tamilnadu here is his interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X