என்னாச்சு? 3 மணி நேரமாக தேர்தல் முடிவுகளை அப்டேட் செய்யாத தேர்தல் ஆணையம்.. எதோ நடக்குது?
கோயம்புத்தூர்: 3 மணி நேரமாக நாடு முழுக்க தேர்தல் முடிவுகளை தங்கள் இணைய பக்கத்தில் அப்டேட் செய்யாமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 288 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

உதவி தேவை ; இப்போது உள்ள சூழலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றே கருதப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் 3 மணி நேரமாக நாடு முழுக்க தேர்தல் முடிவுகளை தங்கள் இணைய பக்கத்தில் அப்டேட் செய்யாமல் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கோயம்புத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அதை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்யாமல் இருந்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் 2 மணி நேரம் கழித்து அப்டேட் செய்யப்பட்டது.
கோயம்புத்தூரில் திமுக கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்று வருகிறார். தபால் வாக்குகள் முடிந்து வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 33997 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். அதிமுக சிங்கை 15594 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26741 வாக்குகளையே பெற்றுள்ளார்.ஆனால் இதை தேர்தல் ஆணையம் இன்னும் அப்டேட் செய்யவில்லை. கோவை தொடர்பாக எதையும் தேர்தல் ஆணையம் அப்டேட் செய்யாமல் இருப்பது விவாதம் ஆகி உள்ளது.
கோவை நிலவரம்: கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸாக களமிறக்கப்பட்டார்.
பின்னடைவு: இதுவரை கிட்டத்தட்ட 5 கட்ட வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர் முன்னிலை வகித்து வருகிறார். 33997 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். அதிமுக சிங்கை 15594 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 26741 வாக்குகளையே பெற்றுள்ளார்.
2019 பொதுத் தேர்தல்: கடந்த 2019 பொதுத் தேர்தலில் கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திடம் சேர்ந்து உள்ளது. மக்கள் நீதி மய்யத்திடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி ஆர் நடராஜன் இங்கே 571,150 வாக்குகள் பெற்று வென்றார். பாஜக சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் இங்கே 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் கல்யாண் சுந்தரம் 60,519 வாக்குகள் வென்றார்.
கடந்த 10 லோக்சபா தேர்தல்களில் இங்கே காங்கிரஸ் 3 முறை, திமுக 1 முறை, சிபிஎம் 2 முறை, பாஜக 2 முறை, சிபிஐ 1 முறை, அதிமுக 1 முறை வென்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கே அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார்.
கோயம்புத்தூரில் பாஜக தலைவர் அண்ணாமலை கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அதை தேர்தல் ஆணையம் அப்டேட் செய்யாமல் இருந்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications