• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"முதலிரவை" வீடியோ எடுத்த போலீஸ்கார கணவன்.. மனைவிக்கு மாத்திரைகளை தந்து.. கலெக்டர் வரை வந்த விவகாரம்

Google Oneindia Tamil News

கோவை: ஆபாச வீடியோவை எடுத்து வைத்து கொண்டு, எஸ்ஐ கணவர் தன்னை மிரட்டி வருவதாக இளம்பெண் ஒருவர், கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் தந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி... இவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் உள்ளதாவது: எனக்கும் கணவருக்கும் கடந்தாண்டு ஜுன் 13ல் திருமணம் நடந்தது. வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் , 20 பவுன் நகையும், கணவருக்கு 5 பவுன் நகையும் போடப்பட்டது..

என்னது இது? பாம்பா? எங்க கொடுங்க.. அப்படியே லாவகமாக வாங்கிய தமிழிசை.. சிங்கப்பெண்ணே! - வீடியோ என்னது இது? பாம்பா? எங்க கொடுங்க.. அப்படியே லாவகமாக வாங்கிய தமிழிசை.. சிங்கப்பெண்ணே! - வீடியோ

உடலுறவு

உடலுறவு

இருவரும் ஒரே வீட்டில் வசித்தோம். திருமணம் ஆன முதல் நாளிலேயே என்னிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டார். விருப்பத்திற்கு மாறாக மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார்... 14 நாள் என்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, கோவை சென்று வருவதாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு எந்த தொடர்பும் இல்லை. போனை 'ஸ்விட்ச் ஆப்' செய்து விட்டார். இந்நிலையில் கணவரின் பெண் நண்பர், என்னிடம் அசிங்கமாக பேசினார்.

 மாத்திரைகள்

மாத்திரைகள்

நானும், கணவரும் தனிமையில் இருந்த விவரத்தை சொல்லி கேலி செய்து சிரித்தார். எனது நிலை பற்றி, என் தாயார் வந்து மாமனார் குடும்பத்தினரிடம் கேட்டார். அப்போது அவர்களும் தன் மகன் எஸ்பி வரை பதவிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன எங்கள் தகுதி என கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர். 'எங்கள் மகனுக்கு ஜாதகம் சரியில்லை. தோஷம் கழிப்பதற்காக உங்கள் மகளை திருமணம் செய்தோம். என் மகனை ஏதாவது தரச் சொல்கிறோம். வாங்கிக்கொண்டு, மகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடு' என்று கூறி விட்டனர்.

முதலிரவு

முதலிரவு

அதன் பிறகு போன் செய்த கணவர், 'ரொம்ப ஆசைப்படக்கூடாது. சத்தம் போடாமல் யாரையாவது திருமணம் செய்து கொள். இல்லையெனில் முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதை வெளியிட்டு உன்னை சாகடித்து விடுவேன்' என்று மிரட்டினார். முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்து வேறு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் கணவர் ஆறுமுக நயினார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

 நடவடிக்கை

நடவடிக்கை

குற்றம் சாட்டப்பட்ட கணவர், கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல ஒரு சம்பவம் கோவையிலும் கடந்த வருடம் நடைபெற்றது.. அப்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

English summary
wife complaint against police sub inspector due to family issue to coimbatore collector சப்இன்ஸ்பெக்டர் மீது இளம்மனைவி கோவை கலெக்டரிடம் புகார் தந்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X