கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரக்கிங் போன புவனேஸ்வரி.. விரட்டி விரட்டி.. மிதித்தே கொன்ற யானை.. கதறிய கணவர்.. கோவையில் ஷாக்!

வாக்கிங் சென்ற பெண்ணை யானை மிதித்து கொன்றது

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்கிங் போன புவனேஸ்வரி... மிதித்தே கொன்ற காட்டு யானை - வீடியோ

    கோவை: டிரக்கிங் போய் கொண்டிருந்த புவனேஸ்வரியை, விரட்டி விரட்டி சென்று மிதித்தே கொன்றுவிட்டது காட்டு யானை... மனைவியின் சடலத்தை கட்டிப்பிடித்து கொண்டு கணவன் அழுதது காண்போரை கண்கலங்க வைத்துவிட்டது.

    கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது.. பாலமலை வனப்பகுதி என்று பெயர்.. பரந்து பிரிந்து காணப்படும் இந்த காட்டு பகுதிக்கு அடிவாரத்தில் குஞ்சூர்பதி என்ற கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் இருந்து மாங்குழி வழியாக ஒருசிலர் பாலமலைக்கு அடிக்கடி வாக்கிங் போவார்கள்... அதாவது மலையேற்றத்தில் ஈடுபடுவார்கள்.. ஆனால் இதற்கு வனத்துறை சார்பில் எந்த அனுமதியும் தரப்படவில்லை.. எனினும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காட்டுப்பகுதியில் டிரக்கிங், வாக்கிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்இதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்

    கணவர் பிரசாந்த்

    கணவர் பிரசாந்த்

    அப்படித்தான் புவனேஸ்வரியும் கிளம்பினார்.. கேரளாவை சேர்ந்தவர் இவர் கோவையில் வசித்து வருகிறார்.. 40 வயதாகிறது.. சங்கரா கண் ஆஸ்பத்திரியில் நிர்வாக பிரிவு அதிகாரி... இவரது கணவர் பிரசாந்த், ஒரு இரும்பு கடை வைத்து நடத்துகிறார்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கணவர், நண்பர்களை அழைத்துகொண்டு அவுட்டிங் போகலாம் என்று நினைத்து பாலமலைக்கு காரில் வந்து இறங்கினர்.

    டிரக்கிங்

    டிரக்கிங்

    மொத்தம் 8 பேர்.. விடிகாலை நேரத்திலேயே இவர்கள் இந்தபகுதிக்கு வந்துவிட்டனர்.. காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, டிரக்கிங் போய் கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில்தான் ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று அவர்கள் முன்பு திடீரென வந்து நின்றது.. யானையை பார்த்ததும் எல்லோருமே அலறி அடித்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினர்.

    மிதித்து கொன்றது

    மிதித்து கொன்றது

    அப்படி ஓடும்போது, யானை புவனேஸ்வரியை மட்டும் துரத்திச் சென்றது.. எவ்வளவு தூரம் ஓடியும் யானையிடமிருந்து மீள முடியவில்லை.. புவனேஸ்வரியாலும்ஒரு கட்டத்துக்கு மேல் வேகமாக ஓட முடியவில்லை.. அதனால் விரட்டி விரட்டி சென்ற யானை, புவனேஸ்வரியை காலாலேயே மிதித்து கொன்றுவிட்டது.

    உருக்குலைந்த உடல்

    உருக்குலைந்த உடல்

    இதை கண்டு அலறிதுடித்தார் கணவர் பிரசாந்த்... தகவலறிந்து வனத்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவ்வளவுநேரம் தன்னுடன் ஜாலியாக பேசிக் கொண்டு வந்த மனைவி, அடுத்த சில நிமிடங்களில் உருக்குலைந்து உடல் கிடப்பதை கண்டு துடிதுடித்து அழுதார் பிரசாந்த்.

    கோரிக்கை

    கோரிக்கை

    வனத்துறையினர் அனுமதியின்றி இப்படி மலையேறுவதும், வாக்கிங் போவதும் தவறு என்று தெரிந்தும் பொதுமக்கள் தொடர்ச்சியான தவறுகளை செய்வது வருந்தத்தக்கது என்றும், ரோந்து பணி சென்று இப்படி மலையேற்றம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    English summary
    female officer killed by wild elephant while on a trek near coimbatore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X