கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"குஜால்" பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள்.. நம்ப முடிகிறதா.. நம்ம கோயமுத்தூரில்தான்!

தனியார் நிறுவன காட்டேஜ் குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    Kovai Cottages: டிக்-டாக் காதலால் வந்த வினை | உல்லாசமாக இருக்கவே தனி காட்டேஜ்- வீடியோ

    கோவை: குஜால் பண்ணவே ஒரு காட்டேஜ் கட்டி விட்டிருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா.. நம்ம கோயமுத்தூரில்தான்!

    கோவை பீளமேட்டில் இப்படி காட்டேஜ் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது கல்யாணம் ஆகாத பெண், ஆண்சேர்ந்து வாழ இப்படிப்பட்ட வீடுகளை வாடகைக்கு தனியார் நிறுவனம் ஒன்று கட்டி விட்டுள்ளதாம்.

    Women association complaint against the Private Cottage

    இதை பார்க்க காட்டேஜ் போலவே இருப்பதாக சொல்லப்படுகிறது. இங்கு கல்யாணம் ஆகாத ஆண், பெண் தங்கி கொள்ளலாம் என்ற அறிவிப்பினால், எந்நேரமும் இளசுகள் கூட்டம் நிரம்பி வழிகிறதாம்.

    இது சம்பந்தமான விஷயத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கையில் எடுத்துள்ளது. மாவட்ட கலெக்டர் ராசாமணியை சந்தித்து, ஒரு புகாரையும் அளித்துள்ளது. அதில், "கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியார் நிறுவனம் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டேஜ் போல நடத்தி வருகிறது.

    ஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்! ஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்!

    இங்கு திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சேர்ந்து தங்கி கொள்ளலாம் என்று இணையத்திலும் விளம்பரப்படுத்துகிறது. இதனால் எந்நேரமும் இங்கு இளம் பெண், ஆண் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் என்பதால், இது போன்ற காட்டேஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏற்கனவே பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடந்ததற்கு முக்கிய காரணமே அனுமதி இல்லாத பண்ணை வீடுகள் தான். அதே போல் கோவையிலும் தொடராமல் தடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    English summary
    Women association complaint to Kovai District Collector about illegal Cottages near Peelamedu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X