கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னுல்ல.. ரெண்டில்லை.. 20 பெண்களை ஏமாற்றி பணம் கறந்த "மாப்பிள்ளை".. இப்போது "மாமியார்" வீட்டில்!

Google Oneindia Tamil News

கோவை: ஒன்னுல்ல.. ரெண்டு இல்லை.. 20க்கும் மேற்பட்ட பெண்களை கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தைகூறி, கோடிக்கணக்கில் பணத்தை கறந்த "ஆல் டைம் மாப்பிள்ளை" இப்போது "மாமியார்" வீட்டில் உள்ளார்.

கோவை மாவட்டம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர். தனியாகத்தான் வசித்து வருகிறார்.

இப்போதைக்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என்றாலும், இதற்கு முன்பு, கோவை புதூர் பகுதியில் பொட்டிக் என்ற பெயரில் ஒரு ஜவுளி கடை நடத்தி வந்திருக்கிறார்.ஆனால் நஷ்டம் வந்துவிட்டதால், கடுமையான அப்செட்டில் இருந்தார்.

அழுதுள்ளார்

அழுதுள்ளார்

15 வருஷத்துக்கு முன்பு நாமக்கல் தனியார் என்ஜினியரிங் காலேஜில் தன்னுடன் படித்த கேரளாவை சேர்ந்த ஜிதின்ஷா என்பவர் அறிமுகம் இன்ஸ்ட்டாகிராம் மூலம் ரேவதிக்கு கிடைத்தது. அதனால் நட்பு மீண்டும் தொடர்ந்தது. ஏற்கனவே தொழில் ரீதியான நஷ்டம், கணவர் பிரிந்தது என்ற வேதனையில் இருந்த ரேவதி எல்லா பிரச்சனையும் நண்பரிடம் கொட்டி அழுதுள்ளார்.

ரேவதி

ரேவதி

கல்யாணம் ஆகாத நண்பரோ, ஒரு கட்டத்தில், ரேவதியை நேரில் வந்து சந்தித்து கல்யாணமும் பண்ணி கொள்வதாக சொன்னார். ஆரம்பத்தில் இதற்கு ரேவதி மறுத்தாலும், பேசி பேசியே ரேவதியை சம்மதிக்க வைத்துவிட்டார் ஜிதின்ஷா. அடுத்ததாக பாலியல் ரீதியாக ரேவதியை பயன்படுத்திக்கொண்ட ஜிதின்ஷா, கல்யாணத்தை பற்றி வாயே திறக்கவில்லை.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதுக்கு ஏஜெண்டிற்கு 10 லட்சம், விசாவிற்கு 2 லட்சம் தேவை எனவும் சொல்லி, ரேவதியிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் வரை பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக பெற்றுள்ளார். இது மட்டுமில்லை.. ரேவதியின் கிரிடிட் கார்டையும் சேர்த்து வாங்கி வைத்து கொண்டு, அந்த பணத்தையும் விடவில்லை.

முதல் மனைவி

முதல் மனைவி

இந்த சமயத்தில்தான், ரேவதிக்கு பேஸ்புக்கில் ஒரு பிரண்ட் ரிக்கவஸ்ட் வந்தது.. அவர்தான் அமெரிக்காவில் வசிக்கும் ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கப் என்பவர். அப்போதுதான் இடிந்து போனார் ரேவதி. ஜித்தின்ஷா இப்படித்தான் பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அதனால் அவரை விட்டு தனியாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.

புகார்

புகார்

ஏற்கனவே நொந்து போய் இருந்த ரேவதிக்கு இது மேலும் ஏமாற்றத்தை தந்தது. இதைபற்றி ஜிதின்ஷாவிடமே ரேவதி கேட்டுள்ளார். நேரில் வந்து இதை பற்றி விளக்குகிறேன் என்று சொன்ன ஜிதின்ஷா, வரவே இல்லை. ரேவதி போன் பண்ணாலும் எடுக்கவில்லை. இதன்பிறகுதான் ரேவதி கோவை மாநகர துணை கமிஷனரிடம் புகார் தந்தார். அதன்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்கை விசாரித்து வந்தனர்.

கைது

கைது

இந்த நிலையில் ஜித்தின்ஷா ஆலப்புழாவில் இருந்து பெங்களூருக்கு பஸ்ஸில் சென்று, அங்கிருந்து பிளைட் மூலம் துபாய் செல்ல உள்ளதாகவும் ரேவதிக்கு தகவல் கிடைக்கவும், அதை ரேவதி போலீசாருக்கு தெரிவித்தார். அதன்படியே போலீசாரும் ஜித்தின்ஷா சென்ற பஸ்ஸை வழிமறித்து, அவரையும் மடக்கி பிடித்து, வழக்கு பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர். இதுவரைக்கும் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஜிதின்ஷா ஏமாற்றி பணம் பறித்ததுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.

English summary
Kerala Youth cheating more than 20 women through instagram for money and arrested by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X