கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை தொடர் குன்டுவெடிப்புகள்: வங்கதேச பிரதமரின் பேரன் பலி- 9 பாகிஸ்தானியர்கள் கைது- வீடியோ

    கொழும்பு: உலகையே உலுக்கிய 359 பேரை காவு வாங்கிய இலங்கை தொடர் குன்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்க்ள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் பலியானோர் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.

    3 Indians arrested as Sri Lanka bombings death toll crosses 350

    இந்நிலையில் ஷங்ரி-லா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டு நபர் குறித்தும் அவருக்கு உதவியவர்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக வெல்லம்பிட்டிய போலீசார் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

    அதில் ஷாங்ரி-லா ஹோட்டல் மனித வெடிகுண்டு நபர் அவிசாவளை என்ற இடத்தில் செப்பு வயர் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகவும் அவருக்கு வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் தமிழர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி நேரங்கள் முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை.. வெளியான புது தகவல் இலங்கை குண்டு வெடிப்பு.. சில மணி நேரங்கள் முன்பே எச்சரித்த இந்திய உளவுத்துறை.. வெளியான புது தகவல்

    அத்துடன் மனித வெடிகுண்டு நபரின் மனைவி மற்றும் தாயாரும் தெமட்டகொட என்ற இடத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

    English summary
    9 Pakistanis and 3 Indians arrested for Easter Sunday massacres, death toll passes 350 in Srilanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X