கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 8 இடங்களில் குண்டுவெடிப்பு.. டென்ஷனில் இலங்கை… 7 பேர் கைது, விசாரணை தீவிரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    அடுத்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

    கொழும்பு:இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

    இலங்கையில் இன்று காலையில் தொடர்ச்சியாக 6 இடங்களில் குண்டுகள் வெடித்தது. கிட்டத்தட்ட 160 பேர் வரை இந்த தாக்குதல்களில் பலியாகினர். அதனை தொடரந்து மதியம் 2 மணி அளவில், இலங்கையின் தெஹிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. அதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், இலங்கையில் ஒரு பெரிய அச்சம் நிலவுகிறது. நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 3 மணி அளவில் கொழும்பு தெமட்டோகொடா பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது.

    இலங்கையில் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்... வேதனை அளிக்கிறது... ஓபிஎஸ், ஈபிஎஸ்இலங்கையில் கொடூரமான வெடிகுண்டு தாக்குதல்... வேதனை அளிக்கிறது... ஓபிஎஸ், ஈபிஎஸ்

    ஊரடங்கு அமல்

    ஊரடங்கு அமல்

    தொடர்ச்சியான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. அரசும் உடனடியாக கூடி...நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியது.

    7 பேர் கைது என அறிவிப்பு

    இந்த ஆலோசனைக்கு பிறகு எம்பி ஹர்ஷா டி சில்வா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜி வர்த்தனா கூறியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் இந்த தகவலை வெளியிட்டு உள்ளார்.

    விஜிவர்த்தனா தகவல்

    விஜிவர்த்தனா தகவல்

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: செய்தியாளர்களுக்கு அமைச்சர் விஜி வர்த்தனா பேட்டியளித்தார். அப்போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நடவடிக்கை எடுக்கப்படும்

    நடவடிக்கை எடுக்கப்படும்

    அரசுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலை தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் 12 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

    English summary
    7 people were arrested for attacks that killed 160 innocent people in Srilanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X