கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் அடுத்த பயங்கரம்.. ஒன்பதாவது குண்டு வெடித்தது.. தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்!

இலங்கையில் கொச்சிக்கடாவில் கார் ஒன்றில் இன்று ஒன்பதாவது குண்டு வெடித்துள்ளது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கொச்சிக்கடாவில் கார் ஒன்றில் இன்று ஒன்பதாவது குண்டு வெடித்துள்ளது. நேற்று 8 குண்டு வெடித்த நிலையில் தற்போது ஒன்பதாவது குண்டு வெடித்துள்ளது.

நேற்று காலை இலங்கை கொழும்புவில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

இதில் மொத்தம் 450 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த 87 டெட்டனேட்டர்கள்.. திக் பிளான்.. இலங்கையில் தொடர் பதற்றம் பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த 87 டெட்டனேட்டர்கள்.. திக் பிளான்.. இலங்கையில் தொடர் பதற்றம்

 எங்கு எல்லாம்

எங்கு எல்லாம்

கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச், சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. அதன்பின் இன்னொரு ஹோட்டல் மற்றும் வீடு ஒன்றில் குண்டு வெடித்தது.

 கொச்சிக்கடாவில் மீண்டும்

கொச்சிக்கடாவில் மீண்டும்

இந்த நிலையில் இலங்கையில் தற்போது இன்னொரு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. கொச்சிக்கடாவில்தான் இந்த குண்டும் வெடித்துள்ளது. இங்குதான் நேற்று முதல் குண்டு வெடித்தது. அங்கு கார் ஒன்றில் இந்த குண்டு வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

 கண்டுபிடித்தார்கள்

கண்டுபிடித்தார்கள்

இந்த குண்டு வெடிக்கும் முன்பே மோப்ப நாயின் உதவியுடன் அதை கண்டுபிடித்துவிட்டனர். அங்கு வேகமாக வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுப்பட்டார்கள். சுமார் 10 நிமிடம் கஷ்டப்பட்டு அந்த குண்டை செயலிழக்க முயற்சி செய்தும் அவர்களால் செயலிழக்க செய்ய முடியவில்லை.

 குண்டு வெடித்தது

குண்டு வெடித்தது

இதனால் அங்கிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து அந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை, உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பதாவது குண்டுவெடிப்பு அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
The 9th explosion in Sri Lanka today, after yesterday 8 series explosions killed 300 people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X