கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிடம் பெற்ற 400 மில்லியன் டாலர் கடன்.. திருப்பிச் செலுத்தியது இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு : இந்தியாவிடம் இருந்து பெற்ற 400 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை திருப்பி தந்து விட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் இந்தியா, ஜப்பான், இலங்கை கூட்டு முயற்சியில் கிழக்கு கொதிகலன் முனையம் அமைக்கும் திட்டம் (இசிடி) மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அறிவித்து இந்தியா மற்றும் ஜப்பானுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதேசமயம், இசிடி திட்டத்திற்காக அளிக்கப்பட்ட தொகையை, 2020 ம் ஆண்டு ஜூலை மாதம், கோவிட் தாக்கத்தால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் பிற செலவுகளுக்காக இலங்கை பயன்படுத்தியது.

After Pulling Out of ECT Deal, Sri Lanka Clears USD 400 Million Debt to India

இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் இந்திய அரசும் வேறு வழியின்றி, இலங்கைக்கு அளித்த பணத்தை (400 மில்லியன் டாலர்) திருப்பிச் செலுத்தும்படி கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்தப் பணத்தை திருப்பிச் செலுத்தி விட்டது இலங்கை.

இது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தி விட்டோம். உரிய காலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இந்தத் தொகை செலுத்தப்பட்டு விட்டது. இந்த தொகையை முன்கூட்டியே செலுத்தும்படி இந்தியாவிடம் இருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. இரு நாட்டு கூட்டு முயற்சிகளும் எதிர்காலத்திலும் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை பொருளாதார நிபுணரும், எதிர்க்கட்சி எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ஹர்ஷ் டி சில்வா டிவீட் போட்டுள்ளார். அதில் கடன் திருப்பி செலுத்தும் அளவிற்கு இலங்கையிடம் போதிய பணம் இல்லை. சர்வதேச நிதியம் பணம் கொடுத்தால்தான் உண்டு. அது கொடுக்காவிட்டால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் இலங்கை பணத்தை திருப்பிச் செலுத்தி விட்டதாக இந்திய தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. திட்டமிட்டபடி இலங்கை மத்திய வங்கி பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டதாக இந்தியத் தூதரகம் விளக்கியுள்ளது.

இருப்பினும் இந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவகாசம் இருந்ததாகவும், இந்தியா அழுத்தம் கொடுத்ததால் இலங்கை வேறு வழியில்லாமல் முன்கூட்டியே கடனைத் திருப்பிச் செலுத்தியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

English summary
Sri Lanka’s Central Bank (CBSL) also returned the USD 400 million currency swap to India, foreclosing a key debt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X