கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஐ லவ் யூ.. எப்படி இருக்கீங்கப்பா.. நிம்மதியா தூங்குங்க" இறந்த ஆறுமுக தொண்டைமானுக்கு மகள் கடிதம்

ஆறுமுகம் தொண்டைமான் மகள் உருக்கமாக எழுதிய கடிதம் வைரலாகிறது

Google Oneindia Tamil News

கொழும்பு: "அப்பா எப்படி இருக்கீங்க? நீங்க எங்கே போயிருந்தாலும், மாஸ்க் மட்டும் போட்டிருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். ஏன் என்றால், முகமூடி உங்களுக்கு பிடிக்காது..ன்னு எனக்கு தெரியும்.. நான் எங்கு போனாலும் நீங்கள் அங்கு இருப்பதாகவே உணர்கிறேன்.. உங்கள் கையை நான் பிடித்து கொண்டு, நான் இருக்கேன் அப்பா, என்று சொல்லணும்போல இருக்கிறது... எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க.. நிம்மதியா தூங்குங்க.. ஐ லவ் யூ அப்பா" என்று மறைந்த ஆறுமுகம் தொண்டைமானின் மகள் டாக்டர் நாச்சியார் தன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

ஆறுமுகம் தொண்டைமான்.. இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர்.. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் இருந்தவர்.. தோட்ட உட்கட்டமைப்பு வளர்த்துறை அமைச்சராகவும் உயர்ந்தவர்.. இலங்கை அரசியலில் பல உச்சங்களை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 26-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.. அவருக்கு 55 வயது!

 arumugam thondamans daughter nachiyar has writtern a heart touching letter

ஆனால் இவரது இறுதி சடங்கில் பெற்ற மகள் நாச்சியாரால் கலந்து கொள்ள முடியவில்லை.. அவர் ஒரு டாக்டர்.. தந்தையின் முகத்தை ஒருமுறைகூட கடைசிவரை பார்க்க முடியாமல் நாச்சியார் வடித்த கண்ணீருக்கு அளவே இல்லை.

இந்நிலையில், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாமல் போனது குறித்து, இவர் ஒரு கடிதம் தன் அப்பாவுக்கு எழுதியுள்ளார்.. இந்த கடிதத்தை படித்த ஒவ்வொருவரும் நெகிழ்ச்சியில் கண்கலங்கி வருகின்றனர்.. அதன் சுருக்கம் இதுதான்:

''அப்பா.. நீங்க எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டீர்கள்... எப்படி இருக்கீங்க? எனது மனசை நொறுக்கும் அந்த செல்போன் அழைப்பு சில நாட்களுக்கு முன்பு வந்தது... முடிவில்லா கண்ணீருடன் சில மணி நேரம் பயணித்து நான் வீட்டிற்கு வந்தும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன்.

ஆரம்பத்தில் நீங்க என்னை டாக்டர் ஆக்க நினைத்தீர்கள்.. ஆனால் நான் அதை புரிந்து கொள்ளாமல் உங்க கிட்ட சண்டை போட்டேன்.. பலமுறை குடும்ப நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் போனதற்காகவும், அந்நிகழ்வுகளை தவற விட்டதற்காகவும் உங்களை குற்றம் சாட்டி இருக்கிறேன்.. ஆனால் இன்று நான் ஒரு டாக்டராக என் கடமையை செய்து கொண்டிருக்கிறேன். அதில் நீங்க நிச்சயம் பெருமை அடைவீர்கள்.. ஒரு மகளாக தந்தையை பார்க்க முடியவில்லை என்பதுதான் எனக்கு கோபத்தை தருகிறது.. நான் இப்போது உங்களுடன் இருக்க நினைத்தாலும், மாஸ்க் மற்றும் நான்கு சுவருக்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

லடாக் பக்கம் திரும்பிய புடின் பார்வை.. இந்திய-சீன சண்டை பற்றி ரஷ்யா திடீர் கருத்து.. யாருக்கு ஆதரவு?லடாக் பக்கம் திரும்பிய புடின் பார்வை.. இந்திய-சீன சண்டை பற்றி ரஷ்யா திடீர் கருத்து.. யாருக்கு ஆதரவு?

நீங்க எங்கே போயிருந்தாலும், மாஸ்க் மட்டும் போட்டிருக்க மாட்டீங்கன்னு நம்பறேன். ஏன் என்றால், முகமூடி உங்களுக்கு பிடிக்காது..ன்னு எனக்கு தெரியும்.. நான் எங்கு போனாலும் நீங்கள் அங்கு இருப்பதாகவே உணர்கிறேன்.. உங்கள் கையை நான் பிடித்து கொண்டு, நான் இருக்கேன் அப்பா, கவலைப்படாதீங்க என்று சொல்லணும்போல இருக்கிறது... எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க.. நிம்மதியா தூங்குங்க.. ஐ லவ் யூ அப்பா" என்று எழுதியுள்ளார்.

ஏராளமானோரை நெகிழ வைத்து வருகிறது இந்த கடிதம்.. நாச்சியாருக்கு பலரும் நம்பிக்கையையும், ஆறுதலையும் தந்து வருகிறார்கள்.. ஆயிரம் இருந்தாலும், அப்பாவின் முகத்தை ஒருமுறைகூட பார்க்க முடியாமல் போன சோகத்தை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஈடு செய்ய முடியாதுதான்!!

English summary
arumugam thondamans daughter nachiyar has writtern a heart touching letter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X