கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்ற கலைப்பு.. அறிவிப்பை வாபஸ் பெற சிறிசேனா முடிவு?

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்தார். இந்த நிலையில் அதற்கான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்றவுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டு நாடாளுமன்றத்தை கலைத்தார் சிறிசேனா.

Big Turmoil in Srilanka: Looking for Dignified Exit, Sirisena may not dissolve parliament

இதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே வழக்கு தொடுத்து இருந்தார். அதன்பின் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நாடாளுமன்ற கலைப்பிற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து கூட்டப்பட்ட நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ராஜபக்சேவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது.இதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க தவறினார்.

ராஜபக்சவிற்கு பெரும்பான்மை இல்லை என்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் நாடாளுமன்றதத்தில் ரணில் விக்ரமசிங்கே முறையாக பிரதமராக பதவி ஏற்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்ததை இன்று வாபஸ் பெற வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டில் இருந்து தகவல்கள் வருகிறது. இன்று இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்புள்ளது.

சிறிசேனவின் இந்த திடீர் முடிவு, ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.

English summary
Big Turmoil in Srilanka: Looking for "Dignified Exit", Sirisena may not dissolve parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X