கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெடிபொருள் ஆலை கண்டுபிடிப்பு... இலங்கையில் 160 தீவிரவாதிகளுக்கு பயிற்சி... பகீர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    SRILANKA NEWS: இலங்கையில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு- வீடியோ

    கொழும்பு: இலங்கையில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் 160 பேர் இருப்பதாக கொழும்பு நாளிதழ் வெளியீட்டுள்ளது. மேலும், வெடிபொருள் குடோனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறி வைத்து நடத்திய தாக்குதல் நடந்தது. இந்தநிலையில், கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் 10 வது முறையாக மீண்டும் குண்டு வெடித்தது. இருசக்கர வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்யும் போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.

    Bomb Blast: 160 terrorists trained in Sri Lanka, Explosive plant discovery

    இலங்கை தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக உயர்ந்துள்ளது. அதில் 39 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை அமைச்சர் ருவான் விஜேவர்தனே தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தலைநகர் கொழும்பில் மீண்டும் குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகள் அடையாளத்தை தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.

    தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபர் தற்கொலைத் தாக்குதலில் பலியானதாகவும், இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் விஜேவர்தனே தகவல் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், வெடிபொருள் ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வெல்லம்பிடியில், ஆலையில் போலீஸ் நடத்திய சோதனையில் வெள்ளி தயாரிப்பு என்ற பெயரில் வெடிபொருட்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வானாத்துவில்லு என்ற இடத்தில் போலீஸ் நடத்திய சோதனையில் தீவிரவாதிகளின் பட்டியல் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 75 ஏக்கர் தென்னந்தோப்பில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை.. சொத்துக்காக மனைவியால் கொல்லப்பட்ட என்.டி.திவாரி மகன்..போலீஸ் அதிரடி நடவடிக்கை..

    இலங்கையில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளது இலங்கை அமைச்சகம். அதே சமயம், தொடர் குண்டு வெடிப்புகளால் மக்கள் பீதியில் உள்ளனர். கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மர்ம பார்சல் வைக்கப்பட்டுள்ளதை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

    English summary
    Bomb Blast: 160 terrorists trained in Sri Lanka
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X