• search
கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கொழும்பு துறைமுக நகரம்... இலங்கையில் உருவானது சீனாவின் சுயாட்சி தேசம்- இந்தியா என்ன செய்யும்?

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கொழும்பு துறைமுகநகரம் என்ற பெயரில் சீனாவின் சுயாட்சி பிரதேசம் உருவாக இலங்கை நாடாளுமன்றமும் ஒப்புதல் தெரிவித்துவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிகப் பெரும் அச்சுறுத்தலை சீனா மூலம் ஏற்படுத்தி இருக்கிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

  Srilanka-வில் உருவானது China-வின் சுயாட்சி தேசம்.. நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

  யாஸ் புயலால் மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு.. காற்றழுத்தம் புயலாக மாறிவிட்டால் வெதர்மேன்யாஸ் புயலால் மழை.. சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு.. காற்றழுத்தம் புயலாக மாறிவிட்டால் வெதர்மேன்

  இலங்கை ஒரு தனித்தீவாக இருந்த போதும் இதனை முன்வைத்துதான் பல்லாயிரம் ஆண்டுகாலமாக தெற்காசியாவின் அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை யார் வசம் இருக்கிறதோ அந்த நாடுதான் தெற்காசியாவில் மேலாதிக்கம் செலுத்தும் வல்லமை கொண்டது என்பது புவிசார் அரசியல் கோட்பாடு.

  இதனடிப்படையில்தான் காலந்தோறும் இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கம் நீடித்த ஒன்றாக இருந்தது. மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி இந்த விவகாரத்தில் தெள்ளத் தெளிவான நிலைப்பாடுடன், இலங்கையில் வேறு எந்த ஒரு அன்னிய நாடு காலடி கூட வைக்கவிடாமல் வெளியுறவுக் கொள்கையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். ஆனால் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்த இறுக்கம் தளர்ந்து போனது.

  அணிசேரா கொள்கையில் தளர்வு

  அணிசேரா கொள்கையில் தளர்வு

  1990களுக்குப் பிந்தைய தாராள பொருளாதார மயமாக்கல் கோட்பாடு வியாபித்து இந்தியாவையும் ஆட்டிப் படைக்க இந்தியாவின் திடமான வெளியுறவு கோட்பாடுகள் ஊசலாட்டத்துக்குள் தள்ளப்பட்டன. ஒருகாலத்தில் அணிசேரா கொள்கை பேசிய இந்தியா, மெல்ல மெல்ல அமெரிக்கா சார்பு நிலையை நோக்கிப் போனது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அண்டை தேசங்களையும் தம் பிடியில் வைத்திருந்த இந்தியா அதன் வல்லாண்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியது.

  தமிழீழமும் தமிழரும்

  தமிழீழமும் தமிழரும்

  இந்தியாவின் பிடி நழுவிய இடங்களில் எல்லாம் மெல்ல மெல்ல சீனா தனது இருப்பை விஸ்தீரனப்படுத்தியது. இதன் உச்சம்தான் இப்போது இலங்கையில் ஒரு சுயாட்சி பெற்ற நகரையே சீனாவினால் பெற முடிந்திருக்கிறது. இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்கள், இலங்கையின் அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைகளை கோரியபோது அவர்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதன்விளைவாக தனித் தமிழீழம் எனும் தேசத்துக்காக ஆயுதப் போராட்டம் நடத்திய போது அழித்தொழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.

  சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

  சீனாவுக்கு ஒரு சுயாட்சி பிராந்தியம்

  ஆனால் இலங்கைக்கு எந்தவித தொடர்புமே இல்லாத நாடுபிடி வேட்கையில் நுழைந்த சீனாவுக்கு சுயாட்சி தேசமாக ஒரு நகரையே தங்க தாம்பாளத்தில் தாரைவார்த்து கொடுத்திருக்கிறது சிங்களம். இதற்கான ஒப்புதலை இலங்கை நாடாளுமன்றமும் வழங்கிவிட்டது. கடந்த 20 ஆண்டுகால இந்திய மத்திய அரசுகள் வெளியுறவுக் கொள்கையில் எப்படி கோட்டை விட்டிருக்கிறது என்பதற்கு இந்த சீனாவின் சுயாட்சி நகரமே நல்ல எடுத்துக்காட்டு. இந்த சுயாட்சி நகரத்துக்குள் சீனா, ஆங்கிலம், சிங்களம்தான் மொழிகளாம். இங்கே தமிழுக்கு இடம் இல்லை. என்னதான் இலங்கைக்கு சொந்தமானதாக கொழும்பு நகரம் இருந்தாலும் கொழும்பு துறைமுக நகரம் என்பது சீனாவுக்கு சொந்தமாகிவிட்டது.

  இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

  இந்திய பாதுகாப்புக்கு பேராபத்து

  துறைமுக நகர பணிகள், வேலைவாய்ப்பு என்ற பெயரால் சீனர்கள் தங்குடையின்றி குடியேறலாம். ஏற்கனவே மன்னார் வளைகுடாவில் மிக பிரம்மாண்ட காற்றாலை அமைக்க சீனாவுக்கு இலங்கை அனுமதி கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் தலைப்பகுதி தொடங்கும் வங்கக் கடல் பிராந்தியத்தை மிக எளிதாகவே வேவு பார்த்துக் கொண்டிருக்கிறது சீனா. இந்தியாவின் எல்லை பாதுகாப்புக்கு லடாக், டோக்லாம், அருணாச்சல பிரதேசங்களை விட மிக மிக மோசமான அச்சுறுத்தல் உள்ள பிரதேசமாக வங்க கடல் உருவெடுத்திருக்கிறது.

  இந்தியாவும் தமிழீழமும்

  இந்தியாவும் தமிழீழமும்

  இலங்கையில் தமிழீழம் உருவானால் இந்தியாவுக்குதான் பாதுகாப்பு என்கிற யதார்த்த உண்மையை இந்திரா காந்தி உணர்ந்திருந்தார். அதனால் தமிழீழம் உருவாக அவர் அத்தனை விதமான உதவிகளையும் செய்தார். ஆனால் பின்னாளில் இலங்கையில் தனி ஈழம் உருவானால் இந்திய இறையாண்மைக்கு பேராபத்து என்று உண்மைக்கு மாறாக அதிகாரவர்க்கத்தினர் குறுக்குசால் ஓட்டினர். அதனால் தமிழீழம் கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளும் 2 லட்சம் தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

  இந்திய வெளியுறவு கொள்கை

  இந்திய வெளியுறவு கொள்கை

  இப்போது எந்த ஆயுதப் போராட்டமும் இல்லாமலேயே இலங்கைக்குள் சீனா ஒரு தேசத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தனி ஈழம், இந்தியாவுக்கு பேராபத்து எனில் தனி சீனா சுயாட்சி தேசம் இந்தியாவுக்கு நன்மையா செய்யப் போகிறது? இனியேனும் இலங்கை விவகாரத்திலும் ஈழத் தமிழரின் நியாயமான யதார்த்தமான கோரிக்கைகள் தொடர்பிலும் இந்திய வெளியுறவு சக்திகள் அதீதமான உண்மையாக அக்கறை செலுத்துவது என்பதுதான் நமது தேசத்தின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய ஒரு யுக்தியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

  English summary
  Sri Lankan Parliament passed China-backed Colombo port city bill.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X