கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை என் பங்காளி...நான் என்னவோ செய்வேன்.. அதை நீ ஏன் கேட்கிற மேன்? அமெரிக்காவிடம் சீனா வம்பு

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் தாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் தேவையே இல்லாமல் தலையிடக் கூடாது என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இந்தியாவும் சீனாவும் சரிசமமாக போட்டி போட்டுக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவும் தங்கள் பங்குக்கு காலூன்றுவதில் கவனமாக இருக்கிறது.

இந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்துஇந்தியா - அமெரிக்கா 2+2 பேச்சுவார்த்தை - ராணுவ தகவல் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்து

சீனா- அமெரிக்கா மோதல்

சீனா- அமெரிக்கா மோதல்

இதனால் இலங்கையை முன்வைத்து சீனா- அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிக்கிறது. அண்மையில் அமெரிக்கா அதிகாரியான தாம்சன், சீனாவின் இலங்கை தலையீடுகளை காட்டமாக விமர்சித்திருந்தார்.

பாம்பியோ பயணம்

பாம்பியோ பயணம்

இந்த நிலையில் இலங்கைக்கு குறுகிய பயணமாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ செல்கிறார். இந்த பயணத்தை முன்வைத்து கொழும்பில் உள்ள சீனா தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யுஎஸ் தலையிட எதிர்ப்பு

யுஎஸ் தலையிட எதிர்ப்பு

அதில், இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவு ஆயிரமாண்டுகளாக நீடிக்கிறது. தேவையே இல்லாமல் அமெரிகா இலங்கை விவகாரத்தில் தலையிட கூடாது. இலங்கையுடன் எப்படியான உறவுகளை பேணுவது என்பது சீனாவுக்கு தெரியும்.

ஏன் இந்த பயணம்?

ஏன் இந்த பயணம்?

பாம்பியோவின் பயணத்துக்கு முன்னதாகவே ஏன் இலங்கைக்கு பெருமளவு ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க வேண்டும்? இலங்கைக்கு பாம்பியோ வருவதால் கொரோனா கட்டுபாட்டுக்குள் வந்துவிடுமா? இலங்கையின் நன்மைக்காக் பாம்பியோ இங்கு வருகிறார்? எனவும் சீனா தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

English summary
Chinese embassy in Srilanka's Colombo has issued a statement on US Secretary of State Mike Pompeo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X